- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2 கமலுடன் மோத தயாரான வணங்கான், இயக்குனர் பாலா செய்த தரமான சம்பவம் -...

இந்தியன் 2 கமலுடன் மோத தயாரான வணங்கான், இயக்குனர் பாலா செய்த தரமான சம்பவம் – அடடா சூப்பர் சான்ஸை மிஸ் பண்ணிய முன்னணி ஹீரோ!

- Advertisement -

இயக்குனர் பாலா, தமிழ் சினிமா இயக்குனர்கள் வரிசையில் ஒரு தரமான இயக்குனராக பெயர் பெற்றவர். இந்திய இயக்குனர்களில் ஒருவராக மதிக்கப்படுபவர். படப்பிடிப்பு தளத்தில் அவரது சில செயல்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும் தனது படைப்பில் ஆகச் சிறந்த கலைஞனாக மதிக்கப்படுபவர்.

தனது முதல் படமான சேது மூலம், நடிகர் விக்ரம் திரை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியவர். இந்த படத்தில் மட்டும் நடிக்கவில்லை என்றால், சியான் விக்ரம் என்ற அற்புத கலைஞனை தமிழ் சினிமா மிஸ் பண்ணியிருக்கும் என்பதே உண்மை. அடுத்து, நந்தா படம் மூலம் சூர்யாவை ஒரு மாஸ் ஹீரோவாக மாற்றிய பெருமை டைரக்டர் பாலாவையே சேரும்.

- Advertisement -

பாலா இதுவரை இயக்கிய படங்களில் நான் கடவுள், பிதாமகன், தாரை தப்பட்டை, பரதேசி, அவன் இவன், நாச்சியார் என அவரது படங்கள் ஒவ்வொன்றும் வித்யாசமான கதைக்களத்தில் உருவானவை. அதர்வா, சசிக்குமார், ஆர்யா, விஷால் போன்றவர்களை வேறு களத்தில் நடிக்க வைத்த பெருமைக்குரியவர்.

இந்நிலையில், நடிகர் சூர்யாவை தனது வணங்கான் படத்தில் நடிக்க கமிட் செய்தார் பாலா. ஆனால் ஒரு மாதத்துக்கு மேல் படப்பிடிப்பில் கலந்துக்கொண்ட சூர்யா, சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று வெளியேறி விட்டார். அதற்கு, டைரக்டர் பாலா அவரை மரியாதையின்றி நடத்தியதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

அது, பாலா படத்தில் நடித்த பல கலைஞர்களுக்கும் ஏற்பட்ட கசப்பான அனுபவமாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது. ஏனெனில் அவரது படத்தில் நடிப்பவர், ஒரு நடிப்பு தொழிலாளியாக அவரால் பார்க்கப்படுவார். அவர் சொல்கிறபடி வேலை செய்ய வேண்டும். அது சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமலாக இருந்தாலும், அவரது பார்வையில் அவர்கள் சாதாரண ஒரு நடிகராக மட்டுமே இருப்பார்கள்.

இந்த சூழலில்தான், சூர்யா வணங்கான் படத்தில் இருந்து வெளியேறிய நிலையில், வணங்கான் படத்தில் அருண்விஜய் நடித்தார். வணங்கான் வரும் ஜூலையில் ரிலீஸ் ஆகிறது. இந்தியன் 2 படம் ரிலீஸ்க்கு ஒரு வாரம் முன்போ, அதற்கு பின்போ வணங்கான் ரிலீஸ் ஆக உள்ளது. வணங்கான் படத்தை பிரத்யேக காட்சி பார்த்த சிலர், மிரண்டு போயுள்ளனர். தரமான சம்பவமாக படத்தை உருவாக்கியுள்ளார் பாலா. இந்த படத்தில் நடிக்கும் சான்ஸை மிஸ் பண்ணிட்டோமே, என வணங்கான் படம் பார்த்தால் நடிகர் சூர்யா கண்டிப்பாக பீல் செய்வார் என்கின்றனர் படம் பார்த்தவர்கள்.

- Advertisement -

சற்று முன்