பிக்பாஸ் வீட்டில் உள்ள விசித்ரா, சில தினங்களுக்கு முன், தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். 2001ம் ஆண்டில், கேரளா மலம்புழாவில், தெலுங்கு நடிகர் நடித்த ஒரு படப்பிடிப்பில் கலந்துக்கொண்டேன். அப்போது, அவர் என்னை, நைட் ரூமுக்கு வந்துடு, என்றார். நான் போகாததால் பலவிதங்களில் எனக்கு டார்ச்சர் கொடுத்தார் என கூறியிருந்தார்.
இதையடுத்து, விசித்ராவை ரூமுக்கு அழைத்தவர் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தான். 2001ல் பலேவடிவி படப்பிடிப்பின் போது நடந்துள்ளது என, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த பிரச்னையை அடுத்து, விசித்ரா வெளியே வந்த பின் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க ஆந்திரா அரசு முடிவு செய்திருப்பதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா வாழ்வில் நடந்த பரபரப்பான ஒரு தகவலை சினிமா விமர்சகர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார். அதாவது, தமிழில் விக்ரம் நடித்த சாமி படத்தை தெலுங்கில் பாலகிருஷ்ணாவை வைத்து ரீமேக் செய்துள்ளனர். அந்த படம் சூப்பர் ஹிட் ஆகி 250 நாட்களுக்கு மேல் ஓடியிருக்கிறது.
இந்த படத்தை தயாரித்தவர் புரடியூசர் சுரேஷ். இவர், பாலகிருஷ்ணாவின் அகில இந்திய ரசிகர் மன்ற தலைவராக இருந்து, பின் பாலகிருஷ்ணாவின் நம்பிக்கைக்கு உரிய மனிதராக மாறி, அவரது குடும்பத்தில் ஒருவரானார். அதனால் அவரை தனது படங்களுக்கு புரடியூசர் ஆக்கியிருந்தார் பாலகிருஷ்ணா.
இந்நிலையில், சாமி படம் வெற்றிவிழாவுக்கு பிறகு, தனியறையில் புரடியூசர் சுரேஷூம், பாலகிருஷ்ணாவும் காரசாரமாக பேசிக்கொண்டு இருந்த போது, துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டிருக்கிறது. அங்கிருந்தவர்கள் பதறிப்போய் உள்ளே பார்த்த போது, துப்பாக்கியுடன் பாலகிருஷ்ணா நின்றிருக்க, துப்பாக்கி குண்டு பட்டு, கீழே கிடந்திருக்கிறார் புரடியூசர் சுரேஷ். அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து, உயிரை காப்பாற்றி விட்டனர்.
இதற்கிடையே காட்டுத் தீ போல இந்த தகவல் பரவியதால் அப்போதைய மாநில முதல்வர் ராஜசேகரன் ரெட்டி, பாலகிருஷ்ணாவை கைது செய்ய உத்தரவிட்டார். போலீசாரும் தயாராகினர். அப்போது பாலகிருஷ்ணாவை அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்து, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். நீண்டநாட்களாக மனநல பாதிப்புக்காக மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறார் என பொய்யான சர்டிபிகேட் அவரது குடும்பத்தினர் வாங்கியுள்ளனர். இதனால் அவர் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்தார். எனினும் இந்த விவகாரத்தில் நடிகர் நாகார்ஜூனாவின் தந்தை தலையிட்டு பேசி, பிரச்னையை சுமூகமாக முடித்து வைத்தார் என, அதில் செய்யயாறு பாலு கூறியிருக்கிறார்.





