- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமா நடிகர்கள் இனி ஓடிடி படங்களில் நடிக்க கூடாது - தமிழ் திரைப்பட சங்க நிர்வாகிகள்...

சினிமா நடிகர்கள் இனி ஓடிடி படங்களில் நடிக்க கூடாது – தமிழ் திரைப்பட சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு!

- Advertisement -

ஆரம்பத்தில் ஓடிடி நிறுவனங்களின் வருகை என்பது தமிழ் சினிமாவின் அபார வளர்ச்சிக்கு ஒரு பக்கபலமாக இருந்தது. படங்களை அதிகவிலைக்கு வாங்கி கொண்ட முன்னணி ஓடிடி நிறுவனங்களால் தயாரிப்பாளர்கள் அதிக லாபம் அடைந்தனர். ஆனால் இப்போது ஓடிடியின் அபரிமிதமான வளர்ச்சியால் தியேட்டர்களில் ரசிகர்கள் வருகை என்பதே கணிசமாக குறைந்து விட்டது.

இதனால் தமிழ்நாட்டில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் புதிய படங்கள் ரிலீஸ் ஆனால் வருமானமே இருப்பதில்லை. பெரிய நடிகர்களின் படங்கள் தவிர மற்ற நடிகர்களின் படங்கள் எல்லாமே இரண்டு மூன்று நாட்களில் காற்று வாங்க துவங்கி விடுகின்றன. ஏனென்றால் ஓடிடியில் படம் காணும் விருப்பத்தில் ரசிகர்கள் படம் பார்க்க தியேட்டர்களுக்கு வருவதில்லை.

- Advertisement -

இதுகுறித்து தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், சினிமா துறையின் மூத்த உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று காலையில் நடந்தது. இதில் தமிழ் சினிமா சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன.

மேலும் பல முக்கிய முடிவுகளும் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டன. பின்னர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தமிழ்குமரன், மூத்த தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ் டி சிவா உள்ளிட்டோர் கூட்டாக அளித்த பேட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழ் சினிமாவின் நலம் காக்க தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கொண்ட கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கூட்டம் இனி அடிக்கடி நடக்கும்.

- Advertisement -

இன்றைய கூட்டத்தில் தமிழ் சினிமாவின் தியேட்டர் வசூல் அதிகமாக பாதிக்கப்படுவதால் இனி திரைப்படம் வெளியான பின் 8 வாரங்களுக்கு பிறகு தான் ஓடிடியில் படம் வெளியிட வேண்டும். அதற்கு தக்கபடி தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதேபோல் நடிகர்கள் நடிகர்கள் நடிகைகள் இனி வியாபாரத்தில், லாபத்தில் பங்கு என்ற முறையில் சம்பளம் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றும் பேசி உள்ளோம். ஓடிடியில் நிறைய பிரச்சனைகள் வருகிறது என்பதால் சினிமாவில் நடிப்பவர்கள் ஓடிடியில் நடிக்க கூடாது என்றும் முடிவெடுத்துள்ளோம்.

இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் இந்த குழு முடிவு செய்துள்ளது. அடுத்தடுத்து பல பிரச்சனைகள் குழுவில் பேசப்பட உள்ளது என்று அவர்கள் கூறினர். இந்த கூட்டத்தில் மூத்த தயாரிப்பாளர்கள் ஆர் பி சவுத்ரி சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் விநியோகஸ்தர் சங்க நிர்வாகி திருப்பூர் சுப்ரமணியன் தியேட்டர் சங்க நிர்வாகி பன்னீர்செல்வம், அருள்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

சற்று முன்