தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிர் ரஜினிகாந்த். 50 ஆண்டுகளை கடந்து அவரது திரை பயணம் வெற்றிக்கரமாக நடந்து வருகிறது. 75 வயதிலும் அவர் ஹீரோவாக நடித்து வருகிறார். கூலி படத்தை தொடர்ந்து வருகிற தீபாவளிக்கு ஜெயிலர் 2 படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.
கடந்த 1994ம் ஆண்டு பாட்ஷா படம் வெளியானது முதலே ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர். அப்போதைய பிரதமர் வாஜய்பாய் மற்றும் அத்வானி ப சிதம்பரம் ஜிகே மூப்பனார் சோ உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் சிலர் ரஜினிக்கு அரசியல் களத்தில் ஆதரவு தரவும் முன்வந்தனர்.
ஆனால் ரஜினி சினிமாவில் நடிப்பதும் ஆன்மீகத்தில் ஈடுபடுவது மட்டுமே என்னுடைய வாழ்க்கை. அரசியல் எனக்கு விருப்பமில்லாத ஒரு துறை என்று மறுத்து விட்டார். அதன்பிறகு சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென அரசியலுக்கு வருவேன் என்று சொன்ன ரஜினிகாந்த் பிறகு தனது உடல் நலம் ரசிகர்களின் எதிர்காலம் கருதி அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி விட்டார்.
இந்த சூழலில் நடிகர் விஜய் தவெக என்ற அரசியல் கட்சியை துவங்கி 2 ஆண்டுகளில் தமிழக முதல்வராகி விட்டார். அடுத்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் தனியாக அரசியல் கட்சி துவங்க உள்ளார். லதா ரஜினிகாந்தும் மக்கள் மேடை என்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ளார். ராகவா லாரன்ஸ்சும் அரசியலுக்கு வருவேன் என்கிறார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பெயரை எந்தக் கட்சியும் அமைப்பும் பயன்படுத்தக் கூடாது என்று அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில் கூறியுள்ளது. அதில், நமது அன்புத் தலைவர் ரஜினிகாந்த் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ எந்த ஒரு கட்சிக்கோ அமைப்பிற்கோ பயன்படுத்தக் கூடாது.
தலைவர் ரஜினியின் உத்தரவுப்படி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. சமீபகால நிகழ் கால அரசியல் சூழல் பின்னணியில் ரஜினிகாந்த் பெயர் மற்றும் சில போட்டோக்கள் சில அமைப்புகளால் தவறாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தது. அதன் அடிப்படையில் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் தரப்பில் இந்த எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.





