இயக்குனர் மது ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா கௌதம் கார்த்திக் மஞ்சு வாரியார் உள்ளிட்டோர் நடித்த ஒரு ஸ்பை திரில்லர் படம் மிஸ்டர் எக்ஸ். இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் மிஸ்டர் எக்ஸ் படம் குறித்து நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் திரை விமர்சனம் செய்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஸ்பை ஆக்சன் வகை படங்கள் அரிதாக தான் வருகின்றன. அந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கும் படம் தான் மிஸ்டர் எக்ஸ். இந்த படம் மகாபலிபுரத்தில் நடைபெறும் சர்வதேச மாநாட்டை மையமாக வைத்து நகர்கிறது. 20 நாடுகளின் பிரதமர்கள் கலந்துக்கொள்ளும் இந்த முக்கியமான மாநாட்டை சீர்குலைக்க வேண்டும் என்று தீவிரவாதிகள் திட்டமிடுகின்றனர். அந்த தீவிரவாதிகள் குழுவின் தலைவனாக கௌதம் கார்த்திக் மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார்.
அவரை எதிர்த்து ஆர்யா தலைமையிலான உளவுத்துறை குழு இந்த அச்சுறுத்தலை தடுக்க போராடுவது தான் படத்தின் கதை. படம் குறித்து பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருப்பதாவது, ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வருவதைப் போல ஆர்யாவுக்கு ரஷ்யாவுக்கு செல்லும் அவசர உத்தரவு வருகிறது. அங்கு சிக்கி இருக்கும் சரத்குமார் மற்றும் இந்தியாவின் அணு ஆயுத பொருட்களை மீட்டு வர வேண்டும் என்பதுதான் அவரது மிஷன்.
அதன் மூலம் படம் சர்வதேச ஸ்பை திரில்லர் திசையில் செல்கிறது. ஆர்யா இந்த படத்தில் சிக்ஸ் பேக் உடலுடன் வந்து கவனம் எடுத்தாலும் உளவுத்துறை அதிகாரிக்கு தேவையான பாடி லாங்குவேஜ் குறைவாகவே தெரிகிறது. ஆனால் காதல் காட்சிகளில் அவர் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுவரை ஹீரோவாக மட்டுமே பார்த்து வந்த நடிகர் கௌதம் கார்த்திக் இந்த படத்தில் வில்லனாக புதிய பரிமாணத்தில் கவர்ந்திருக்கிறார்.
இந்த படத்தின் மூலம் இனி அவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். மற்றொரு முக்கிய கதாபாத்திரமாக வரும் நடிகை மஞ்சு வாரியார் ஒரு அட்டகாசமான நடிகை என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால் அவருக்கு போதுமான முக்கியத்துவம் படத்தில் வழங்கப்படவில்லை. அவரை படத்தில் இன்னும் கொஞ்சம் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம்.
இயக்குனர் ஆக்சன் மற்றும் ஸ்பை எலெமெண்ட்ஸ்களை கொண்டு வந்திருந்தாலும் பல காட்சிகள் ஏற்கனவே பல படங்களில் பார்த்த உணர்வை தருகின்றன. திரைக்கதையில் புதுமை குறைவாக இருந்தது. படத்திற்கு அது பலவீனத்தை தருகிறது. ஆக்சன் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு மிஸ்டர் எக்ஸ் ஒரு முறை பார்க்கக்கூடிய படம் என்று பயில்வான் ரங்கநாதன் தனது திரை விமர்சனத்தில் கூறியிருக்கிறார்.





