- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியலில் அவர்… குடும்பத்தில் இவர் - ரஜினி கமலுக்குள் இப்படி ஒரு முரண்பாடா? - ஆச்சரியப்பட்ட...

அரசியலில் அவர்… குடும்பத்தில் இவர் – ரஜினி கமலுக்குள் இப்படி ஒரு முரண்பாடா? – ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் இருவருமே உச்சம் தொட்ட சிகரங்களாக தான் கம்பீரமாக நிற்கின்றனர். 74 வயதில் ரஜினியும் 70 வயதில் கமலும் இன்னும் ஹீரோக்களாக தான் நடித்துக்கொண்டு இருக்கின்றனர். ரஜினி கமல் இருவருமே ஏறக்குறைய ஒரே சம்பளம்தான் ரூ. 150 கோடி வரை வாங்குகின்றனர். இதில் கமல் தயாரிப்பாளராகவும் பல படங்களுக்கு இருப்பதால் லாபத்திலும் கணிசமாக பணம் பார்க்கிறார். சில நேரங்களில் பலத்த நஷ்டங்களையும் சந்திக்கிறார்.

நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள், ரஜினி ஆன்மிக சிந்தனையாளர். கமல் பகுத்தறிவு சிந்தனையாளர். நடிகர் கமல்ஹாசன் கஷ்டப்பட்டு நடித்து பெயர் வாங்கும் ஒரு காட்சியில், நடிகர் ரஜினிகாந்த் சும்மா வந்து நின்று தலைமுடியை கோதினாலே அந்த பெயரும் புகழையும் பெற்று விடுகிறார். இதை கமல்ஹாசனே ஒரு நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆரம்பத்தில் ரஜினி கமல் இருவரும் ஒன்றாக பல படங்களில் இணைந்து நடித்தனர். அப்போது அந்த படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக ஓடியது. ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் ரஜினி கமல் சம்பளம் உயரவில்லை. சினிமாவில் அவர்களது இமேஜ் உயரவில்லை. ஆனால் தயாரிப்பாளர்கள் கொழுத்த லாபம் பார்த்தனர்.

இப்படியே போனால், தயாரிப்பாளர்கள்தான் வளர்ச்சியும் முன்னேற்றமும் அடைவார்கள். நாம் இதே இடத்தில் நின்று தேங்கி விடுவோம் என்று ஒன்றுகலந்து பேசி ஆலோசித்த இருவரும் இனி தனித்தனி பாதையில் பயணிப்போம் என்ற முடிவுக்கு வந்தனர். அதன்பிறகு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் ஒன்றாக இணைந்து நடிப்பதில்லை. ஆனால் இருவருமே தனித்தனியாக உச்சம் தொட்டு சிகரங்களை அடைந்துவிட்டனர்.

- Advertisement -

ஆனால் இப்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருவரும் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க மாட்டார்களா, என்பதுதான். ரஜினி படத்தில் கமலோ அல்லது கமல் படத்தில் ரஜினியோ கேமியோ ரோலில் கூட வந்தால் போதும் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர். நிச்சயமாக இது எதிர்காலத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளது.

இதில் ரஜினி கமல் இடையே 2 முரண்பாடுகள் அமைந்திருக்கின்றன. அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஜினி அரசியலுக்கு வராமல் சினிமாவிலேயே இருந்துவிட்டார். ஆனால் யாருமே எதிர்பார்க்காத நடிகர் கமல் அரசியலுக்கு வந்து விரைவில் ராஜ்யசபா எம்பி ஆக உள்ளார். அதே போல் தன் 2 மகள்களுக்கும் திருமணம் செய்துவைத்து 4 பேரக்குழந்தைகளை பார்த்துவிட்டார் ரஜினிகாந்த். ஆனால் கமலின் 2 மகள்களும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் அந்த வாய்ப்பை இன்னும் கமலுக்கு தராமல் இருக்கின்றனர் என்று இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

சற்று முன்