- Advertisement -
Homeபொழுதுபோக்குஎதிரிகளுக்கு பயந்து மாற்று மதத்தினரிடம் அடைக்கலம் புகுந்த சூர்யா, சிவக்குமாரின் பேச்சை கேட்காததால் வந்த வினை-...

எதிரிகளுக்கு பயந்து மாற்று மதத்தினரிடம் அடைக்கலம் புகுந்த சூர்யா, சிவக்குமாரின் பேச்சை கேட்காததால் வந்த வினை- புட்டு புட்டு வைத்த மூத்த நடிகர்

- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உருமாறியுள்ள சூர்யா, சமீப காலமாகவே ஒன்றிய அரசின் சில திட்டங்களை விமர்சித்து வந்தார். அது மிகப்பெரிய சர்ச்சையை உண்டு செய்தது. அது மட்டுமல்லாது “ஜெய் பீம்” திரைப்படம் வெளியானபோது அத்திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை இழிவுப்படுத்தி சில காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக அந்த ஜாதி மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது.

மேலும் அந்த குறிப்பிட்ட ஜாதி சங்கத்தினர் நீதிமன்றபடிகளை ஏறினார்கள். இவ்வாறு சூர்யா மீது பல சர்ச்சைகள் எழுந்திருந்த நிலையில் சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசிய பயில்வான் ரங்கநாதன் சூர்யாவை குறித்த பல சர்ச்சையான தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

- Advertisement -

“சூர்யாவால் தமிழ் சினிமாவே இரண்டு கோஷ்டியாக பிரிந்துவிட்டது, ஒன்று சூர்யா ஆதரவு கோஷ்டி, மற்றொன்று சூர்யா எதிர்ப்பு கோஷ்டி. சூர்யாவின் ஆதரவு கோஷ்டியில் வெற்றிமாறன், பாரதிராஜா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் இருக்கிறார்கள். எதிர்கோஷ்டியில் இயக்குனர் பிரவீங்காந்த், கௌதமன், சேரன் ஆகியோர் இருக்கின்றனர். இப்படி இரண்டாக பிரிந்துவிட்டது. ஆக சூர்யாவிற்கு திரையுலகத்தின் ஒட்டுமொத்த ஆதரவு இல்லை” என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய பயில்வான் ரங்கநாதன், “சிவக்குமார் சூர்யாவிடம் நல்ல குடும்ப திரைப்படத்தில் நடிக்குமாறும், சர்ச்சையான படங்களில் நடிக்க வேண்டாம் எனவும் அறிவுரை கூறினார். அதே போல் ஜெய் பீம் மாதிரியான படங்களையும் தயாரிக்காதே என்று அறிவுரை கூறினார்.

- Advertisement -

ஆனால் சூர்யா அதனை கேட்பதாக இல்லை. மேலும் எதாவது சர்ச்சைக்குள் சிக்கிவிட்டால் மன்னிப்பு கேட்கும்படியும் கூறினார். அதையும் சூர்யா கேட்கவில்லை. ஜோதிகா பேச்சைத்தான் சூர்யா கேட்பதாக சிவக்குமார் நினைக்கிறார்” என்று கூறிய அவர்,

“சம்பந்தப்பட்ட ஜாதிக்கட்சிக்காரர்கள் சூர்யாவை மிரட்டினார்கள். ஆதலால் சூர்யா தற்போது துபாய்க்கு பறந்துவிட்டார். பல நாடுகள் இருக்கும்போது ஏன் இஸ்லாமிய நாடான துபாய்க்குச் செல்கிறார் என்று கேள்வி எழுகிறது. ஜோதிகா இஸ்லாமியர் என்பதால் இஸ்லாமியர்களின் ஆதரவை பெற சூர்யா துபாய் சென்றுள்ளதாக கூறுகிறார்கள். அங்கே இஸ்லாமியர்கள் சூர்யாவிற்கு பாதுகாப்பு தருவதாக கூறுகிறார்கள்” என்று சர்ச்சையான ஒரு தகவலை கூறி சூர்யா ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

- Advertisement -

சற்று முன்