- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு வழியாக தனது திரைப்படத்திற்கு கதாநாயகனை தேர்வு செய்த விஜயின் மகன்... அடேங்கப்பா... இதுக்கு மட்டும்...

ஒரு வழியாக தனது திரைப்படத்திற்கு கதாநாயகனை தேர்வு செய்த விஜயின் மகன்… அடேங்கப்பா… இதுக்கு மட்டும் ஒரு வருஷம் ஆகிருக்கே… அப்ப நான் படத்துக்கு…

- Advertisement -

நடிகர் விஜயின் தி கோட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு பிறகு வினோத்துடன் ஒரு படத்தில் இணைய இருக்கிறார் விஜய். அதன் பிறகு முற்றிலுமாக திரை உலகிற்கு விடை கொடுத்து விட்டு, அவர் அரசியல் வாழ்க்கையில் களமிறங்குகிறார்.

 

- Advertisement -

இதற்கான பணிகளை தற்போதிலிருந்தே விஜய் மேற்கொண்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்த நிலையில் தற்போது முதல் மாநாட்டிற்கு அக்கட்சி தயாராகி வருகிறது. விக்கிரவாண்டியில் இதனை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.

 

- Advertisement -

இதற்கு அனுமதி அளித்துள்ள விழுப்புரம் மாவட்ட காவல்துறை, 31 நிபந்தனைகளையும் வைத்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மாநாடு நடைபெறும் தேதியை விரைவில் அறிவிக்க இருப்பதாக விஜய் தெரிவித்துள்ளார். இப்படி விஜய் அடுத்த கட்டத்திற்கு செல்லும் நிலையில் அவரது மகன் ஜேசன் சஞ்சய், முதல்முறையாக சினிமாவில் களமிறங்குகிறார்.

 

ஆனால் தனது தந்தையைப் போல் அவர் ஹீரோவாக நடிக்க வராமல் இயக்குனராக தனது பணியை மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக வெளிநாட்டில் அவர் கல்வி பயின்றுள்ளார். தனது நண்பர்களுடன் இணைந்து குறும்படங்களையும் இயக்கி இருக்கிறார் சஞ்சய்.

 

இந்த நிலையில் கடந்த ஆண்டு யாரும் எதிர்ப்பாராத சூழலில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதன்படி லைகா நிறுவனத்துடன், ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டார் சஞ்சய். அந்த நிறுவனத்தின் உடன் ஒரு படத்தை அவர் இயக்குவதாக தெரிவிக்கப்பட்டது.

 

ஆனால் அதன் பிறகு அவர் இயக்கத்தில் யார் நடிக்கப் போவது என்பது குறித்து அறிவிப்பு மட்டும் வெளியாகவே இல்லை. கவின், துருவ் விக்ரம் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்க தற்போது அதில் புதிதாக இடம் பெற்றிருக்கிறார் சந்தீப் கிஷன். ஜேசன் சஞ்சய் கூறிய கதை அவருக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் இதனால் விரைவில் இந்த கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

- Advertisement -

சற்று முன்