- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் கட்சியில் திடீரென முளைத்த கருப்பு ஆடுகள், முக்கிய நிர்வாகிகளை களையெடுக்கும் டி வி கே...

விஜய் கட்சியில் திடீரென முளைத்த கருப்பு ஆடுகள், முக்கிய நிர்வாகிகளை களையெடுக்கும் டி வி கே தலைவர் விஜய் – அட என்னதாம்பா நடந்துச்சு?

- Advertisement -

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவில் இப்போது வேகமாக நடந்து வருகிறது. படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வரும் 17ஆம் தேதி படக்குழு சென்னை திரும்புகிறது.

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சி பெயரை அறிவித்து, அரசியல் கட்சியை தொடங்கினார். நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடாது என்றும் தெளிவுபட அறிவித்திருந்தார்.

- Advertisement -

தொடர்ந்து கோட் படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்த ஆண்டு முதல் முழு தீவிரமாக தனது கட்சி செயல்பாடுகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே விஜய் 69 என்ற படத்தில், டைரக்டர் வினோத் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தை நடிகர் விஜயே தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்று விஜய் ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்த நிலையில், டிவிகே கட்சியை சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள் அந்த விதிமுறையை மீறியதாக தற்போது தெரிய வந்துள்ளது. குறிப்பாக வட மாவட்டங்களில் சில பகுதிகளிலும், தென் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் சிலர் இதர கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

- Advertisement -

நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் மறைமுக ஆதரவை அளிப்பதாக சொல்லி அந்த கட்சிக்கு ஓட்டு போடுமாறு தங்களுக்கு கீழ் உள்ள நிர்வாகிகள் மூலம் உத்தரவிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் மிகப் பெரிய தொகைகளையும் பேரம் பேசி வாங்கியுள்ளனர். இந்த தகவல் தமிழக வெற்றிக்கு கழகம் சார்ந்த உளவுத்துறை மூலம் விஜயின் காதுகளுக்கு எட்டியுள்ளது. இதனால் பயங்கர கோபமான விஜய் விரைவில் இது குறித்து விசாரணை நடத்த உள்ளார்.

கட்சியின் விதிமுறையை மீறி செயல்பட்ட நிர்வாகிகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து அவர்களை கட்சியை விட்டு நீக்கவும் அவர் ஆலோசித்து வருகிறார். இன்னும் கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் கட்சிக்கொடி என எதுவுமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் விஜய் கட்சி சார்ந்த சில நிர்வாகிகள் இப்படி கருப்பு ஆடுகளாக செயல்பட்டு கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டது, விஜய்க்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்