- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 படத்தில் மீண்டும் ரஜினியுடன் நடிக்கும் பிரபல மலையாள நடிகர் - மோகன்லாலை தொடர்ந்து...

ஜெயிலர் 2 படத்தில் மீண்டும் ரஜினியுடன் நடிக்கும் பிரபல மலையாள நடிகர் – மோகன்லாலை தொடர்ந்து தரமான சம்பவத்தை தயார் செய்யும் டைரக்டர் நெல்சன்!

- Advertisement -

கடந்தாண்டில் வெளியான வேட்டையன் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படம் கூலி படப்பிடிப்பை சில மாதங்களுக்கு முன் முடித்து விட்டார். இந்த படத்தின் பிரமோசன் பணிகள் துவங்க இருப்பதாக நேற்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். வரும் ஆகஸ்ட் 14ம் தேதி கூலி படம் ரிலீஸாகிறது.

இப்போது நடிகர் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் துவங்கிய நிலையில் 2 வாரங்கள் அங்கு படப்பிடிப்பு நடந்தது. இப்போது 2 வாரங்களாக கேரளாவில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் அட்டப்பாடி பகுதியில் ஷூட்டிங் நடந்து வருகிறது.

இதுவரை நடிகர் ரஜினிகாந்த் 171 படங்களில் நடித்த நிலையில் முதல் தடவையாக தனது படத்தின் 2ம் பாகத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2 ஆண்டுகளுக்கு முன் 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் படம் பெரிய வெற்றியை பெற்றதால், சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கேட்டுக்கொண்டதால் ரஜினி, ஜெயிலர் 2 படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார்.

ஜெயிலர் படத்துக்கு இசையமைத்த அனிருத் ஜெயிலர் 2 படத்துக்கும் அவரே இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் ரஜினிக்கு மனைவியாக நடிக்கிறார். ஜெயிலர் படத்தில் மருமகளாக நடித்த மிர்ணா மேனன் இந்த 2ம் பாகத்திலும் நடிக்கிறார். அதே போல் ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் இந்த 2ம் பாகம் படத்திலும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது ஜெயிலர் 2 படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவலின் படி இந்த படத்தில் நடிகர் பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வேலைக்காரன் விக்ரம் மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்த பகத் பாசில் ரஜினியுடன் வேட்டையன் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இப்போது ஜெயிலர் 2 படத்திலும் பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வேட்டையன் படத்தில் போலீஸ் அதிகாரியான ரஜினிக்கு உதவியாளராக இருந்து வில்லன்களை பிடிப்பதில் கம்ப்யூட்டரில் பல வித்தைகளை காட்டும் ஒரு டெக்னீஷியனாக பகத் பாசில் நடித்திருந்தார். ஆனால் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிக்கு எதிரான ஒரு வில்லத்தனமாக கேரக்டரில் பகத் பாசில் நடிப்பது தெரிய வந்துள்ளது.

சற்று முன்