- Advertisement -
Homeபொழுதுபோக்குகதாநாயகி ராதிகா என்பதை யாருமே ஏற்கவில்லை; பல ஆண்டுகளுக்கு பின் உண்மையை போட்டுடைத்த இயக்குனர் பாரதிராஜா...

கதாநாயகி ராதிகா என்பதை யாருமே ஏற்கவில்லை; பல ஆண்டுகளுக்கு பின் உண்மையை போட்டுடைத்த இயக்குனர் பாரதிராஜா – தரமான சம்பவமா நடந்துருக்கே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகை ராதிகா முன்னணி நடிகையாக 1980களில் கொடி கட்டி பறந்தவர். ரஜினி கமல் விஜயகாந்த் போன்ற முன்னணி நாயகர்களுடன் அதிக படங்களில் நடித்தவர். அதிக படங்களில் தொடர்ந்து இருவரும் இணைந்து நடித்ததால் ராதிகா, விஜயகாந்தை திருமணம் செய்துக்கொள்ளப் போகிறார் என்ற தகவலும் பரவியது.

ஆனால் ஒரு கட்டத்தில் நடிகர் பிரதாப் போத்தன் ராதிகா முதல் திருமணம் செய்தார். பிறகு அவரை பிரிந்த அவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சார்ட் ஹார்டி என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ரெய்னே என்ற மகள் இருக்கிறார். அவரையும் விவாகரத்து செய்த ராதிகா தொடர்ந்து 3வதாக நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ராகுல் என்ற மகன் இருக்கிறார்.

- Advertisement -

இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராதிகா. அந்த படத்தின் பெரிய வெற்றிக்கு பிறகுதான் பல படங்களில் நடித்து அவர் முன்னணி நடிகையாக மாறினார். இவர் நடிகவேள் எம் ஆர் ராதாவின் மகள், ராதாரவியின் சகோதரி, நடிகை நிரோஷாவின் சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேர்காணல் ஒன்றில் இயக்குனர் பாரதி ராஜா கூறியதாவது, 16 வயதினிலே படத்துக்கு பிறகு நான் இயக்கிய 2வது படம் கிழக்கே போகும் ரயில். இந்த படத்தில் நடிக்க கமல் ஸ்ரீ தேவி கால்ஷீட் கிடைக்கவில்லை. பெரிய ஹீரோ ஒருவரின் தங்கை நடிப்பதாக இருந்து, அவரும் எம்ஜிஆர் படத்தில் நடிக்க போய்விட்டார்.

- Advertisement -

நடிகை மாதவி தெலுங்கில் பிஸியாக இருந்ததால் அவரது தேதியும் கிடைக்கவில்லை. கேரளாவில் பெண் தேடலாமா என்றும் யோசனை வந்தது. அதன்பிறகு ஒரு போட்டோ ஆல்பம் பார்த்த போது, அதில் ராதிகா தெரிந்தார். அவரை பற்றி விசாரிக்க பெசண்ட் நகரில் வீடு என்றனர். நேரில் போய் பார்த்தால், அவர் இலங்கை பெண், சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் பேசுகிறார்.
அவரது அம்மாவிடம் சம்மதம் வாங்கி, கிழக்கே போகும் ரயில் படத்தில் நடிக்க மேட்டுப்பாளையத்துக்கு ரயிலில் ராதிகா, அவரது அம்மாவை அழைத்து வந்தேன்.

என் மனைவி, உதவி இயக்குனர் பாக்யராஜ், கேமரா மேன் உள்பட யாருக்குமே பிடிக்கவில்லை. ராதிகாவை பார்த்து, இவரா கதாநாயகி என முகத்தை சுளித்தனர். பூசணிக்காய் மாதிரி இருக்கிறார் என விமர்சித்தனர். ஆனால் நான் பிடிவாதமாக ராதிகா தான் கதாநாயகி என பிடிவாதமாக நடிக்க வைத்தேன். முதலில் அப்படி சொன்னவர்கள், நான்கைந்து நாட்கள் கழிந்த பிறகு இந்த கேரக்டரில் இவரை விட்டால் நடிக்க ஆளே கிடையாது என ராதிகாவை பாராட்ட துவங்கி விட்டனர் என்று இயக்குனர் பாரதிராஜா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்