- Advertisement -
Homeபொழுதுபோக்குசொன்னதை மட்டும் செய்யுங்க - ஷூட்டிங் ஸ்பாட்டில் அதட்டிய புது இயக்குநர் - பழி வாங்கறியா...

சொன்னதை மட்டும் செய்யுங்க – ஷூட்டிங் ஸ்பாட்டில் அதட்டிய புது இயக்குநர் – பழி வாங்கறியா என எதிர்த்து பேசிய பாரதிராஜா

- Advertisement -

இயக்குநர் பாரதிராஜாவை இயக்குநர் இமயம் என்றே, தமிழ் சினிமாவில் அழைக்கின்றனர். பாரதிராஜா, தமிழ் படங்களை இயக்கிய நாட்களை, தமிழ் சினிமாவில் பாரதிராஜா காலம் என்றே சொல்வதுண்டு. ஏனென்றால் செம்மண் மேடுகளையும், புழுதிக் காட்டையும், கிராமங்களின் யதார்த்த வாழ்க்கையும், கேமராவில் படம் பிடித்து காட்டிய வித்தைக்காரர்.

பிரமாண்டங்களையும், ஸ்டார் நடிகர்களையும் வைத்து படம் பண்ணிக் கொண்டிருந்த இயக்குநர்களுக்கு மத்தியில், கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை, தத்ரூபமாக படம் பிடித்து காட்டி, அவர்கள் சந்திக்கும் சமூக பிரச்னைகளை, தனிமனித போராட்டங்களை, உறவுகளுக்குள் இருக்கிற பிணக்குகளை வெகு யதார்த்தமாக தனது படங்களில் கொண்டு வந்தவர்தான் பாரதிராஜா.

இப்போதும் காதல் படம் என்றால், தமிழ் சினிமாவில் முதலில் சொல்வது அலைகள் ஓய்வதில்லை படத்தையும், கடலோர கவிதைகள் படத்தையும்தான். பாரதிராஜா படைத்த முதல் மரியாதை போன்ற ஒரு காவிய படத்தை, எந்த ஒரு இயக்குநராலும் இனி தந்துவிட முடியாது. சிவாஜி – ராதா இருவருக்கும் இடையிலான அந்த காதலை. அன்பை, நேசத்தை எவராலும் அப்படி காட்டி இருக்க முடியாது.

இயக்குவதில் மட்டுமின்றி நடிப்பிலும் தன் முத்திரையை பதித்து வருகிறார் பாரதிராஜா. அவர் நடிப்பு சொல்லிக் கொடுத்து நடித்தவர்கள்தான் இன்றைய முன்னணி நடிகர், நடிகையர் பலரும் என்றாலும், அவரும் நடிகராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார். நம்ம வீட்டுப்பிள்ளை, திருச்சிற்றம்பலம், குரங்கு பொம்மை, பாண்டியநாடு உள்ளிட்ட படங்களை சொல்லலாம்.

இப்போது, பாரதிராஜா மார்கழித்திங்கள் என்ற புதிய படத்தில், நடிக்கிறார். இந்த படத்தின் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார் அவரது மகன் மனோஜ். முதல் நாள் ஷூட்டிங்கில், பாரதிராஜா ஒரு பெண்ணை பார்த்து, முறைக்க வேண்டிய காட்சி. தலையை சற்று உயர்த்தி, அந்த பெண்ணை பார்த்து முறைக்க சொல்லி இருக்கிறார் இயக்குநர் மனோஜ். அப்போது பாரதி ராஜா நடித்துக்காட்ட, கட் சொன்ன மனோஜ், அப்படியல்ல டாடி, சும்மா அப்படியே நிமிர்ந்து பாருங்க போதும் என்று கூறியிருக்கிறார்.

என்னடா பழிவாங்கறியா என மகனைப் பார்த்து கேட்ட பாரதிராஜா, எத்தனை பேருக்கு நடிப்பை சொல்லிக் கொடுத்திருக்கிறேன், என்று கூறியிருக்கிறார். உங்க காலம் வேற, இந்த காலம் வேற, சொல்றதை மட்டும் செய்யுங்க என அன்பாக சொல்லி இருக்கிறார் மனோஜ். படப்பிடிப்பில் நடந்த இந்த விஷயத்தை, இன்று ஒரு நேர்காணலில் சந்தோஷமாக சொல்லி இருக்கிறார் பாரதிராஜாவின் மகன் மனோஜ்.

சற்று முன்