- Advertisement -
Homeபொழுதுபோக்குநாளை கங்குவா படம் ரிலீஸ், சிறப்பு காட்சி அனுமதிக்காக சூர்யாவுக்கு உதவிய உதயநிதி ஸ்டாலின் -...

நாளை கங்குவா படம் ரிலீஸ், சிறப்பு காட்சி அனுமதிக்காக சூர்யாவுக்கு உதவிய உதயநிதி ஸ்டாலின் – இதுக்கு பின்னாடி இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கா?

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் நாளை ( 14ம் தேதி) கங்குவா படம் ரிலீஸாகிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேசன்ஸ் என்ற 2 நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை பெரிய பொருட் செலவில் தயாரித்துள்ளன. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

வரலாற்று கதையை கொண்ட இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அவருடன் திஷா பதானி, பாபி தியோல், ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படம் முதல் பாகமாக வெளிவர உள்ள நிலையில், 2ம் பாகமாகவும் அடுத்து வெளிவர இருக்கிறது. முதல் பாகத்தில் கேமியோ ரோலில் வரும் நடிகர் கார்த்தி 2ம் பாகத்தி்ல பிரதான வில்லனாக வருகிறார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

எதற்கும் துணிந்தவன் படத்துக்கு பிறகு சூர்யா நடிப்பில் கடந்த 2.5 ஆண்டுகளாக எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. வணங்கான், புறநானூறு படங்களில் கமிட் ஆன சூர்யா, அந்த படங்களில் நடிக்காமல் பிறகு விலகி விட்டார். கடந்த மாதம் 10ம் தேதி கங்குவா ரிலீஸ் செய்த திட்டமிட்ட நிலையில், ரஜினி நடித்த வேட்டையன் ரிலீஸ் காரணமாக, நவம்பர் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கங்குவா படம் 3டி தொழில்நுட்பத்தில் மொத்தம் 38 மொழிகளில் உலகம் முழுவதும் 11500 தியேட்டர்களில் நாளை ரிலீஸாக உள்ளது. இந்த படம் பான் இந்தியா படமாக பிளாக் பஸ்டர் மூவியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை தமிழ்நாட்டில் இந்த படத்துக்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதித்துள்ளது.

- Advertisement -

வழக்கமாக தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு, ஆகஸ்ட் 15 சுதந்திர தின நாள், மே1 தொழிலாளர் தினம் போன்ற பண்டிகை நாட்களில் வெளியாகும் படங்களுக்கு தான் தமிழக அரசு சிறப்பு காட்சி அனுமதி தருவது வழக்கமாக இருந்து வருகிறது.

ஆனால் நாளை வழக்கமாக பணி நாளில் வெளியாகும் இந்த கங்குவா படத்துக்கு சிறப்பு அனுமதி தருவதில் தமிழக அரசு தரப்பில் உடனடியாக ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்த விவகாரம் குறித்து தெரிய வந்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்த விஷயத்தில் தலையிட்டு சூர்யாவுக்கு உதவும் விதமாக நாளை ஒரு நாள் மட்டும் காலை 9 மணி காட்சிக்கு அனுமதி கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளார் என்று தகவல் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்