- Advertisement -
Homeபொழுதுபோக்குவீட்டு வாசலுக்கு போய் நின்றேன்.. அஜித் உதவவே இல்லை.. பாலா யாருனே தெரியாது அவர் செய்தார்.....

வீட்டு வாசலுக்கு போய் நின்றேன்.. அஜித் உதவவே இல்லை.. பாலா யாருனே தெரியாது அவர் செய்தார்.. பாவா லட்சுமணன் உருக்கம்

- Advertisement -

வடிவேலு, விவேக், சந்தானம் உள்ளிட்டோருடன் நகைச்சுவை காட்சிகளில் நடித்தவர் பாவா லட்சுமணன். வடிவேலுவுடன் அவர் நடித்த மாயி படத்தின் வா மின்னல் காமெடி காட்சி வெகு பிரபலம். அந்தப் படம் மட்டுமின்றி வடிவேலுவுடன் எக்கச்சக்க படங்களில் நடித்து புகழ் பெற்றவர். ஒருகட்டத்தில் வடிவேலுவுக்கு வாய்ப்புகள் இல்லாமல் போக பாவா லட்சுமணன் சந்தானத்துடன் நடிக்க ஆரம்பித்தார்.

சந்தானத்துடன் பாவா லட்சுமணன் நடித்த கலகலப்பு பட காமெடி காட்சிகள் மெகா ஹிட்டடித்தவை. சூழல் இப்படி இருக்க திடீரென அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. சர்க்கரை நோய் காரணமாக அவரது கால் கட்டை விரல் அகற்றப்பட்டது. அவருக்கு கலக்கப்போவது யாரு பாலா உள்ளிட்டோ நேரில் சென்று உதவி செய்தனர். ஆனால் வடிவேலு எட்டிக்கூட பார்க்கவில்லை. மேலும் தொலைபேசி செய்துகூட நலம் விசாரிக்கவில்லை. அதுகுறித்து சில பேட்டிகளில் லட்சுமணன் சோகமாக தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய அவர், “வடிவேலுவெல்லாம் எனக்கு ஃபோன் செய்து நலம்கூட விசாரிக்கவில்லை. அதை அவர் பண்ணவும் மாட்டார். விவேக், மயில்சாமி, மனோபாலா ஆகியோர் உயிரோடு இருந்திருந்தால் எனக்கு இந்த நிலைமையே வந்திருக்காது. பல முறை எனது கஷ்ட காலத்தில் பட வாய்ப்பு இல்லாத சமயத்தில் விவேக் ரொம்பவே உதவி செய்திருக்கிறார். அதேபோல்தான் மயில்சாமியும், மனோபாலாவும். அவர்கள் யாரும் இல்லை என்பதால்தான் மற்றவர்களிடம் உதவி கேட்க ஆரம்பித்தேன்.

கலக்கப்போவது யாரு பாலா தம்பி எல்லாம் எனக்கு யார் என்றே தெரியாது. அவர் உதவி செய்தார். அதேபோல் லொள்ளு சபா குழுவினரும் நேரில் வந்து என்னை சந்தித்து உதவிகளை செய்தனர். பாலா எனக்கு 30,000 ரூபாயை கொடுத்தார். அதேபோல் சமுத்திரக்கனி செய்ததையும் நான் எப்போதும் மறக்கவே மாட்டேன்.

- Advertisement -

ஆனால் அஜித்தின் பல படங்களில் நான் நடித்திருக்கிறேன். உடல்நலக்குறைவு ஏற்பட்ட சூழலில் உதவி கேட்டு அஜித் வீட்டுக்கு சென்று அந்த வாசலில் நின்றிருக்கிறேன். சிசிடிவி கேமராவில் முகத்தை எல்லாம் காட்டினேன். அவரது மேனேஜரை தொடர்புகொண்டு பேசினேன். ஆனால் ஒரு ரூபாய்கூட உதவி செய்யவில்லை. அது எனக்கு ரொம்பவே மன வேதனையை கொடுத்தது” என்றார்.

- Advertisement -

சற்று முன்