நடிகர் விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம், வருகிற 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. வரும் வியாழன் அன்று இந்த படம் உலகம் முழுவதும் தி கோட் படம் ரிலீஸ் செய்யப்படும் நிலையில், தளபதி ரசிகர்கள் பெரிய அளவில் உற்சாகத்தில் உள்ளனர். இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறலாம் என்றும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
இந்த படத்தை முழுமையாக பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் குழு, படம் போனதே தெரியவில்லை. படம் நன்றாக உள்ள என்று தங்களது விமர்சனத்தை கூறியுள்ளனர். படத்தில் 7 இடங்களில் வசனங்களை மியூட் பண்ண சொன்ன சென்சார் அதிகாரிகள், படத்தில் எந்த காட்சியையும் நீக்குமாறு கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி தலைவராகிய பிறகு வெளியாகும் அவரது முதல் படம் என்பதால், இந்த படத்தில் அரசியல் காட்சிகள், வசனங்கள் இருக்கும் என்று ஒரு தரப்பினர் எதிர்பார்த்த நிலையில் இந்த படத்தில் துளியளவும் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகளோ, வசனங்களோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தி கோட் படத்தில் இருந்து ஏற்கனவே 3 பாடல்கள் வெளியான நிலையில், இன்று மாலை மட்ட பாடல் வெளியானது. இந்த பாடல், விஜயும் திரிஷாவும் படத்தில் குத்தாட்டம் போடும் அயிட்டம் சாங் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வெளியான 3 பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய ரீச் கொடுக்காத நிலையில் இந்த பாடல் சற்று வரவேற்பை பெற்றதாக தெரிகிறது.
ஆனால் இந்த பாடலில் விஜய் மட்டுமே வருகிறார். அதுவும் அவரது பழைய படங்களின் காட்சிகளே கிராபிக்ஸ்சில் அதிகமாக வருகிறதே தவிர, படத்தில் திரிஷாவும், விஜயும் இணைந்து ஆடுவது போல் வராதது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. இது 23வயது விஜய்க்கான பாடல் என்பது மட்டும் உறுதியாகி உள்ளது.
திரிஷா குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக, இந்த மட்ட பாடலில் திரிஷாவை வெங்கட்பிரபு காட்டாமல் தவிர்த்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. 3 பாடல்களிலும் பெரிய வைப்பை ஏற்படுத்தாத யுவன் சங்கர் ராஜா இந்த பாடலில் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தாரா என்பதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த பாடலிலும் பெரிய அம்சங்கள் இல்லை என்பதுதான் உண்மை.





