- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனி சண்டை சச்சரவுகள் தடையின்றி தொடரும்… பெங்களூருவில் மீண்டும் திறக்கப்பட்ட பிக்பாஸ் வீடு - ...

இனி சண்டை சச்சரவுகள் தடையின்றி தொடரும்… பெங்களூருவில் மீண்டும் திறக்கப்பட்ட பிக்பாஸ் வீடு – நன்றி சொன்ன நடிகர் கிச்சா சுதீப்!

- Advertisement -

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 5ம் தேதி துவங்கியது. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி விஜய் டிவியில் 9வது ஆண்டாக சீசன் 9 இப்போது நடந்து வருகிறது இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இதேபோல் கன்னடம் இந்தி மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ தொடர்ந்து பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. கர்நாடகாவிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக பெங்களூரு தெற்கு மாவட்டம் பிடானி பகுதியில் பிரம்மாண்ட ஸ்டுடியோ அமைக்கப்பட்டு அங்கு பிக்பாஸ் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும் ஸ்டூடியோவை மூட கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்தது. தண்ணீர் மாசுபடுதல் காற்று மாசுபடுதல் தொடர்பாக உரிய அனுமதியை பெறாமல் ஸ்டுடியோ அமைத்து நிகழ்ச்சி நடப்பதாக கர்நாடகா மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் குற்றம் சாட்டியது.

- Advertisement -

இதையடுத்து உடனடியாக அந்த ஸ்டுடியோ மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. பிக்பாஸ் போட்டியாளர்களும் ஸ்டுடியோவில் பணிபுரிந்த ஊழியர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். 17 போட்டியாளர்களும் அதே பகுதியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். இந்த சூழலில் இந்த பிரச்னைக்கு கர்நாடகா மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் நடவடிக்கை எடுத்ததால் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.

இதுகுறித்து டிகே சிவகுமார் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, தெற்கு பெங்களூரின் துணை ஆணையாளரை நான் தொடர்பு கொண்டு இருக்கிறேன், பிக்பாஸ் ஸ்டுடியோவுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றுமாறு கூறியிருக்கிறேன். சுற்றுச்சூழல் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்பதற்குதான் முதல் முன்னுரிமை. தற்போதைக்கு ஜாலிவுட் ஸ்டுடியோ நிறுவனத்தின் மீது உள்ள புகார்ளை எல்லாம் சரிசெய்வதற்கு அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குமாறு என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்டுள்ளேன்.

- Advertisement -

கர்நாடகாவில் இந்த பொழுதுபோக்கு அம்சங்கள் தொடர்ந்து நடைபெறுவது மாநிலத்தின் முதலீடு சம்பந்தப்பட்ட பொருளாதார விஷயங்களுக்கு முக்கியம். அதேவேளையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் அரசு கவனமாக இருக்கிறது என்று அவர் அதில் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் மாவட்ட அதிகாரிகள் இன்று அதிகாலை 3 மணியளவில் மூடப்பட்டிருந்த பிக்பாஸ் ஸ்டுடியோவுக்கு வந்து சீலை அகற்றி மீண்டும் திறந்து வைத்தனர்.

தொடர்ந்து இப்போது வழக்கம்போல பிக்பாஸ் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதையடுத்து நடிகர் நிகழ்ச்சி தொகுப்பாளர் கிச்சா சுதீப் துணை முதல்வர் டி கே சிவக்குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் வலைப் பக்கத்தில் துணை முதல்வர் டிகே சிவக்குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் சுற்றுச்சூழல் மட்டுமல்லாது கலாசாரத்திற்கும் கேடான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

- Advertisement -

சற்று முன்