- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் அண்ணா… உங்க ரசிகர்கள் எல்லாம் என்னை கடிச்சு வெச்சுட்டு இருக்காங்க… - 2வது...

விஜய் அண்ணா… உங்க ரசிகர்கள் எல்லாம் என்னை கடிச்சு வெச்சுட்டு இருக்காங்க… – 2வது வீடியோ வெளியிட்டு தளபதியிடம் கதறிய பிக்பாஸ் ஜூலி!

- Advertisement -

சமீபத்தில் வேலூரில் பேசிய தவெக தலைவர் நடிகர் விஜய் குறித்து பிக்பாஸ் ஜூலி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் ஜல்லிக்கட்டு காளைக்கு புல்கட்டு கொடுக்கறதை பத்தி எல்லாம் பேசாத அண்ணா, அம்பது அம்பதாவே இருக்கட்டும். 500 ஆக்கி விட்டுடாதீங்க அண்ணா என்று விஜய் பேசிய குட்டிக்கதையை கலாய்த்து இருந்தார். இதனால் விஜய் ரசிகர்கள் டிவிகே கட்சியினரும் இணையத்தில் பிக்பாஸ் ஜூலியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதையடுத்து இன்று பிக்பாஸ் ஜூலி வெளியிட்ட 2வது வீடியோவில் கூறியிருப்பதாவது, விஜய் அண்ணா… உங்க வேலூர் பரப்புரை பார்த்து அதுல எதுவும் இல்லேங்கற ஆதங்கத்துல ஒரு வீடியோ ஒண்ணு போட்டேன். உங்களுடைய ரசிகர்கள் ஆமா அவங்க உங்க ரசிகர்கள் மட்டும்தான். ஏன்னா இன்னும் அவங்க அரசியல் வயப்படலையே?

அவங்க வந்து எல்லா சோஷியல் மீடியா சைட்லேயும் வந்து என்னை வந்து கடிச்சு வெச்சுட்டு இருக்கறாங்க. இந்த மைனர் பசங்க கிட்ட இருக்கறது என்னவோ முக்கால்வாசி பேக் ஐடி புரபைல் மட்டும்தான். அதை வெச்சுதான் என்னை மிரட்டீட்டும் இருக்கறாங்க. அதுக்காக பயந்து நான் அந்த வீடியோவை டெலீட் பண்ணவும் மாட்டேன். என் கருத்துகளில் இருந்து பின்வாங்கவும் மாட்டேன்.

என்னை மிரட்டுனா பரவாயில்லை. ஆனா என்னை சார்ந்தவங்களையும் மிரட்டுறதால இதை சொல்ல வேண்டிய கட்டாயத்துல இருக்கிறேன். விஜய் அண்ணா உங்களுக்கு என்னை பழிவாங்கணும்னா நான் என் வீட்டுல இருப்பேன். இல்லேன்னா ஆபீஸ்ல இருப்பேன்.

என்னை என்ன வேணாலும் பண்ணுங்க. ஆனா அவங்களை விட்டுடுங்க. ஓ… நீங்க பனையூரை விட்டு வெளியே வர மாட்டீங்க இல்லே? நான் இன்னும் உயிரோட தான் இருக்கேன். நான் வேணும்னா பனையூர் வர்றேன். என்னை திட்டுனா என்னை திட்டின மாதிரி தான்.

மக்களை திட்டுன மாதிரின்னு யாரையும் உள்ளே இழுத்து போட மாட்டேன். ஒரு பெண்ணுக்கு சோஷியல் மீடியாவுல முக்கியமா எவ்வளவு மரியாதையும் எவ்வளவு மதிப்பும் எவ்வளவு பாதுகாப்பும் உங்க ரசிகர்கள் மத்தியில் இருக்குது என்பதை அந்த வீடியோவுக்கு கீழே இருக்கற கமெண்ட் செக்சனை டைம் இருந்தா படிச்சு பாருங்க. நன்றி அண்ணா என்று பிக்பாஸ் ஜூலி அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

சற்று முன்