- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் இயக்கத்தில் உருவான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இட்லிகடை படங்கள் ரிலீஸ்? குபேரா...

தனுஷ் இயக்கத்தில் உருவான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இட்லிகடை படங்கள் ரிலீஸ்? குபேரா படம் திரைக்கு வருவது எப்போது? – வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் வெற்றி நாயகர்கள் வரிசையில் கண்டிப்பாக சொல்ல வேண்டிய ஒரு முக்கிய முன்னணி நடிகராக இப்போது தனுஷ் இருந்து வருகிறார். நடிகராக மட்டுமின்றி பாடகராக தயாரிப்பாளராக சமீபகாலமாக இயக்குனராகவும் தனுஷ் கொடி கட்டி பறக்கிறார் என்றால் அது மிகையல்ல.

கடந்த 2017ம் ஆண்டில் ராஜ்கிரண் ரேவதி நடிப்பில் ப பாண்டி என்ற படத்தை தனுஷ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் பிளாஷ்பேக்கில் இளம் வயது ராஜ்கிரண், ரேவதி கேரக்டரில் தனுஷ், மடோனா செபாஸ்டியன் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

- Advertisement -

ப பாண்டி படம் வெளியான பிறகு 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படம் இயக்க துவங்கிய தனுஷ், தனது 50வது படம் ராயன் படத்தை அவரே இயக்கி நடித்தார். இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், எஸ்ஜே சூர்யா காளிதாஸ் ஜெயராம் சந்தீப் கிஷன் செல்வராகவன் துஷாரா விஜயன் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏஆர் ரகுமான் இசையில் படம் வேற லெவலில் வெற்றி பெற்றது.

கடந்த ஆண்டில் தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்த படங்களில் தனுஷ் இயக்கி நடித்த ராயன் படமும் ஒன்று. உலகம் முழுவதும் ரூ. 155 கோடி வசூலித்தது. இந்த அபார வெற்றிக்கு பிறகு இப்போது இட்லிகடை என்ற படத்தை தனுஷ் இயக்கி முடித்துள்ளார். இந்த படமும் முடியும் தருவாயில் உள்ளது.

- Advertisement -

அதே போல் தனது சகோதரி மகன் ஹீரோவாக நடித்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் தனுஷ் டைரக்ட் செய்துள்ளார். அந்த படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிந்த நிலையில், போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்திலும் தனுஷ் நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இதன்படி இந்த 2025ம் ஆண்டில் தனுஷ் நடித்த மற்றும் இயக்கிய 3 படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. அதன்படி தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லிகடை படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதே நாளில் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி வெளியாக வாய்ப்புள்ளது. அதே போல் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படம் பிப்ரவரி 14ம் தேதி ரீலீஸ் ஆகிறது. அதன்பிறகு குபேரா படம் ஜூன் 20ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்