- Advertisement -
Homeபொழுதுபோக்குரெட் கார்டு கொடுத்தா என்ன சார்?.. பிக்பாஸ் பிரதீப்புக்கு அடித்த ஜாக்பாட் இதுவா?.. செம தகவல்...

ரெட் கார்டு கொடுத்தா என்ன சார்?.. பிக்பாஸ் பிரதீப்புக்கு அடித்த ஜாக்பாட் இதுவா?.. செம தகவல் உள்ளே

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென்று பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். இதன் காரணமாக அந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக ஏழாவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இதில் முதலில் 18 போட்டியாளர்களும் பிறகு வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் ஐந்து போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கின்றனர்.

மொத்தம் 23 போட்டியாளர்களில் பவா செல்லதுரை தானாகவே வெளியேறினார். அதனையடுத்து அனன்யா, வினுஷா, யுகேந்திரன், விஜய் வர்மா, அன்னபாரதி, ஐஷு ஆகியோர் எவிக்ட் செய்யப்பட்டனர். மேலும் பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இந்த சீசனின் டைட்டில் வின்னர் இவர்தான் என்று பலரும் நினைத்திருக்க அவர் வீட்டுக்குள் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற முத்திரையோடு வெளியேற்றப்பட்டார்.

- Advertisement -

பிரதீப் அவ்வாறு வெளியேற்றப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் கமல் ஹாசனை கடுமையாக விமர்சித்தனர். இதன் காரணமாக அவர் மீண்டும் வீட்டுக்குள் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிரதீப்பும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “எனக்கு சிறந்த விளையாட்டை கொடுத்தால் நான் பெரிய ஷோவை தருவேன். இந்த முறை உள்ளே போனால் இடைவேளை முடித்து வரும் ஒரு படத்தின் இரண்டாம் பாதி போல் ரிவெஞ்ச் மோடில் செல்வேன்” என்று கூறி அதகளம் செய்தார்.

ஆனால் கடந்த வாரம் சனிக்கிழமை பேசிய கமல் தான் செய்தது நியாயம் என்று சுற்றி வளைத்து பேசி பிரதீப் வீட்டுக்குள் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்பதை மறைமுகமாக உணர்த்திவிட்டார். கமல் ஹாசனின் அந்த முடிவும் பெரும் விமர்சனத்தை கிளப்பியிருக்கிறது. கமலை மட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சி குழு மற்றும் விஜய் டிவி நிர்வாகத்துக்கும் கண்டனங்கள் எழுந்தன.

- Advertisement -

உண்மையில் சொல்லப்போனால் பிரதீப் விஷயத்தில் சேனல் நிர்வாகத்துக்கு கெட்ட பெயர் ஏற்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. அதை துடைத்துக்கொள்ள பிரதீப்பை உள்ளே விடலாம் என்று சேனல் நிர்வாகம் முடிவெடுத்தாலும் அது கமல் ஹாசனுக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் அவர் உள்ளே விடப்படவில்லை என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

இந்நிலையில் பிரதீப் விஷயத்தில் விஜய் டிவி ஒரு முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருக்காக ஒரு வெப் தொடரை இயக்க பிரதீப்பிடம் சேனல் நிர்வாகம் அப்ரோச் செய்திருப்பதாகவும் அதற்காக தற்போது பிரதீப் கதையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. பிரதீப் இயக்குநராவாரா பொறுத்திருந்து பார்ப்போம்..

- Advertisement -

சற்று முன்