- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த பணம் எனக்கு இன்னும் வரலே - என்கிட்ட 100 ரூபா கூட இல்லே… -...

அந்த பணம் எனக்கு இன்னும் வரலே – என்கிட்ட 100 ரூபா கூட இல்லே… – பிக்பாஸ் போட்டியாளர் ரம்யா ஜோவுக்கு நேர்ந்த பரிதாபம்!

- Advertisement -

விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2023ம் ஆண்டு வரை 7 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன்பிறகு 2 ஆண்டுகளாக நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இப்போது பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் இருந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து பிரவீன் காந்தி கலையரசன் அப்சரா வியானா பிரஜின் எஃப் ஜே ஆதிரை கெமி பிரவீன் ராஜ் வாட்டர் மெலன் திவாகர் மற்றும் ரம்யா ஜோ உள்ளிட்ட போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இப்போது சாண்ட்ரா விக்கல்ஸ் விக்ரம் சபரி திவ்யா கணேஷ் அமித் கானா வினோத் சுபிக்‌ஷா கனி கம்ருதீன் பார்வதி அரோரா ஆகிய 11 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து வருகின்றனர். இவர்களில் வரும் வாரங்களில் சில போட்டியாளர்கள் வெளியேற்றப்பட உள்ளனர். இதுவரை டைட்டில் வின்னராக வெற்றி பெறும் தகுதியான போட்டியாளர் என்பதில் பலத்த குழப்பமே நீடித்து வருகிறது.

இதற்கிடையே 2 வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் இருந்து ரம்யா ஜோ என்ற போட்டியாளர் எவிக்ட் ஆகி வெளியேற்றப்பட்டார். அவர் ஏற்கனவே ஆடல் பாடல் நிகழ்ச்சியில் நடனமாடி கொண்டிருந்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நான் மீண்டும் இதுபோன்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன் என்று அவர் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் ரம்யா ஜோ பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு இப்போது மீண்டும் ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் நடனம் ஆடிக் கொண்டிருக்கிறார். இதுபற்றி பலரும் விமர்சித்தனர். இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்று பேசிய ரம்யா ஜோ கூறியதாவது, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போயிட்டு வந்ததும் மேடையில் ஆடுறேன்னு சொல்றாங்களே?

எனக்கு செலவுக்கு 100 ரூபாய் யார் கொடுப்பா? என் பிரச்சனை எனக்கு மட்டுமே தெரியும். எனக்குன்னு வீட்டு வாடகை, இஎம்ஐ என பல செலவுகள் இருக்கிறது. யாருக்காவது இதெல்லாம் தெரியுமா? எனக்கு செலவுக்கு காசு வேணும். அதனால ஆடறேன். பிக்பாஸ் முடிய இன்னும் ஒரு மாசம் ஆகும். என் சம்பளம் வர லேட் ஆகும். அதனால்தான் ஆடறேன் என்று பிக்பாஸ் ரம்யா ஜோ அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்