தமிழ் சினிமாவில் கடந்த 1990ம் ஆண்டுகளில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் ரோஜா. அவர் செம்பருத்தி என்ற படத்தில் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக அறிமுகமானார். அவர் சினிமாவில் அறிமுகம் செய்தது இயக்குனர் ஆர்கே செல்வமணி தான். தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
ரஜினிகாந்த் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் அர்ஜூன் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த ரோஜா, ஒரு கட்டத்தில் ஆந்திராவில் அரசியலில் ஆர்வம் காட்டினார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் எம்எல்ஏ மற்றும் அமைச்சராக ரோஜா இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் விஜய் நடித்த நெஞ்சினிலே என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் ரோஜா விஜயுடன் நடனமாடி இருந்தார். தொடர்ந்து காவலன் என்ற படத்தில் விஜய்க்கு அசின் ஜோடியாக நடித்திருந்தார். அதில் அசின் அம்மாவாக ராஜ்கிரணுக்கு ஜோடியாக ரோஜா நடித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ரோஜா கூறியதாவது, விஜயோட டிவிகே மீட்டிங் பார்க்கும் போது உண்மையாவே எனக்கு ரொம்ப ஷாக்கா இருக்குது. நாங்க கவர்மெண்ட்ல சிஎம்மா இருந்து ஒரு மாவட்டத்துல மீட்டிங் வைக்கணும்ன்னா அதுக்கு எவ்வளவு பேர் வேலை செய்யணும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும்.
மினிஸ்டர் எம்பி எம்எல்ஏ எஸ்பி கலெக்டர்ன்னு எல்லாரும் ஒத்துழைச்சா தான் அது சாத்தியமாகும். ஆனால் இவங்க யாரும் டிவிகே வில இல்லே. ஆனாலும் இவ்வளவு பெரிய கூட்டம் வருது. மக்கள் கூட்டம் திரண்டு வருது. இந்த விஷயத்தை விஜய் எப்படி செஞ்சாருன்னு சத்தியமா எனக்கு தெரியல.
மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று விஜய் தெரிஞ்சுக்கிட்டு மக்களுக்கு அதை கொடுக்கும்போது மக்கள் ஆதரவு விஜய்க்கு கண்டிப்பாக இருக்கும் என்று நடிகை ரோஜா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். நடிகர் ரஜினி, சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக பேசியபோது அவருக்கு எதிராக குரல் கொடுத்தவர் ரோஜா என்பதும் குறிப்பிடத்தக்கது.





