- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் டிவியில் விரைவில் பிக்பாஸ் சீசன் 9 … பிரமோ வீடியோவில் ஆழ்ந்த யோசனையில் சோபாவில்...

விஜய் டிவியில் விரைவில் பிக்பாஸ் சீசன் 9 … பிரமோ வீடியோவில் ஆழ்ந்த யோசனையில் சோபாவில் அமர்ந்திருக்கும் விஜய் சேதுபதி!

- Advertisement -

எப்போதுமே மற்றவர்களின் பிரச்னைகளை வேடிகை பார்ப்பதில் தெரிந்து கொள்வதில் மக்களுக்கு அலாதியான ஆசைதான். குறிப்பாக குழாயடி சண்டை பக்கத்துக்கு வீடுகளில் எதிர் வீடுகளில் சண்டை சச்சரவுகள் என்றால் வேடிக்கை பார்க்க மக்கள் கூட்டம் திரண்டு விடும். ரோட்டில் 10 பேர் கூடி நின்றாலே அதை வேடிக்கை பார்க்க பெருங்கூட்டம் வந்துவிடும்.

அந்த கான்செப்ட்டில் உருவானதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சி. முன்பின் அறிமுகம் இல்லாத, அல்லது அறிமுகம் ஆன 20 பேரை ஒரு வீட்டுக்குள் 100 நாட்கள் தங்க வைத்து அவர்களுக்குள் டாஸ்க் என்ற பெயரில் சண்டை சச்சரவுகளை மூட்டிவிட்டு அதனால் ஏற்படும் பிரச்னைகளை காட்டி பார்வையாளர்களை குஷிப்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

- Advertisement -

இதில் போட்டியாளர்களாக பெரும்பாலும் சினிமா, டிவி சீரியல், விளம்பர நடிகர் நடிகைகள் அதிகமாக கலந்துக் கொள்கின்றனர். சமீபமாக சமூக வலைதளங்கள் வாயிலாக பிரபலமானவர்களும் போட்டியாளர்களாக பங்கேற்கின்றனர். இதுவரை 8 சீசன்கள் முடிந்த நிலையில் விஜய் டிவியில் சீசன் 9 விரைவில் துவங்க இருக்கிறது.

கடந்த 2017ம் ஆண்டில் துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்த ஆண்டில் 9வது சீசன் நடக்க உள்ளது. 2023ம் ஆண்டு வரை 7 ஆண்டுகள் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். கடந்தாண்டில் அவர் விலகியதால் நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் தொகுப்பாளராக பொறுப்பேற்று நிகழ்ச்சியை நடத்தினார். இந்த ஆண்டிலும் அவரை அந்த பணியை தொடர்கிறார்.

- Advertisement -

விஜய் டிவி நிர்வாகம், பிக்பாஸ் சீசன் 9 பற்றிய பிரமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. 15 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோவில் சுழலும் சோபாவில் அமர்ந்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி ஆழ்ந்த யோசனையில் இருப்பது போல காட்டப்பட்டுள்ளது. விரைவில் பிக்பாஸ் சீசன் 9 என்ற அறிவிப்பு அதில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் நடந்த பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் முத்துக்குமரன் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார். அதற்கு முந்தைய ஆண்டில் டிவி சீரியல் நடிகை அர்ச்சனா டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார். இந்த முறை இன்னும் போட்டியாளர்கள் யார் என்ற விவரமே தெரியவில்லை. சஸ்பென்ஸ் ஆக இருந்து வருகிறது. எனினும் சிலர் யூகங்களின் அடிப்படையில் சிலரை கூறி வருகின்றனர். ஆனால் பிக்பாஸ் துவக்க அறிமுக நாளில்தான் போட்டியாளர்கள் யார் என்பது உறுதியாக பார்வையாளர்களுக்கு தெரிய வரும்.

- Advertisement -

சற்று முன்