- Advertisement -
Homeபொழுதுபோக்குதெரியாத்தனமாக நான் வார்த்தையை விட்டுட்டேன், அது இப்படி ஆகுமுன்னு நான் நினைக்கலே - விழா மேடையில்...

தெரியாத்தனமாக நான் வார்த்தையை விட்டுட்டேன், அது இப்படி ஆகுமுன்னு நான் நினைக்கலே – விழா மேடையில் வெளிப்படையாக பேசிய நடிகர் விஷால்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் செல்லமே என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஷால். தொடர்ந்து தருண் கோபி இயக்கத்தில் அவர் நடித்த திமிரு படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக அதிரடி காட்டினார். அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் வெளியான சண்டக்கோழி படம் நடிகர் விஷாலுக்கு மிகப்பெரிய அடையாளத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தது.

தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்த நடிகர் விஷால், முன்னணி நடிகராக மாறினார். மேலும் விஷால் பிலிம் பேக்டரி என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கிய அவர் பல படங்களை அவரே சொந்தமாகவும் தயாரித்தார். விஷால் நடித்த படங்களில் துப்பறிவாளன் அவன் இவன் போன்ற படங்கள் மாறுபட்ட கதைக்களங்களில் வித்யாசமான அவரது நடிப்பை வெளிப்படுத்தியது.

- Advertisement -

நடிகராக தயாரிப்பாளராக இருந்த நடிகர் விஷால், சுந்தர் சி இயக்கத்தில் மதகத ராஜா என்ற படத்தில் விஜய் ஆண்டனி இசையில் ஒரு பாடலும் பாடி தன்னை ஒரு பாடகராகவும் வெளிப்படுத்தினார். 2012ம் ஆண்டில் எடுக்கப்பட்ட அந்த படம் 12 ஆண்டுகள் கழித்து கடந்த பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்தது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்து வரும் நடிகர் விஷால், தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுமான பணிகளை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர். வருகிற ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்ளிட்ட பிற மொழிகளை சேர்ந்த முன்னணி நடிகர் நடிகைகளும் பங்கேற்க உள்ளனர்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் விஷால் பேசியதாவது, நடிகர் சங்கம் கட்டிடம் திறப்பு விழாவுக்கு தனிப்பட்ட முறையில் எல்லோரையும் கூப்பிடுவேன். நானும் தப்பித் தவறி தெரியாத்தனமாக ஒரு வார்த்தை விட்டுட்டேன். என் கல்யாணம் சங்க கட்டிடம் கட்டிய பிறகுதான் நடக்கும் என்று சொல்லி விட்டேன்.

ஆனால் 9 ஆண்டுகள் ஆகும் என்று எனக்கு தெரியாது. ஆனா எல்லாரும் சங்கம் கட்டிட திறப்பு விழாவுக்கு வரணும். நடிகர் சங்க கட்டிடம் 4 தூண்கள் இருந்தால்தான் அந்த கட்டிடம் அமைக்கப்படுகிறது. பேஸ்மட்டம் இருந்தாதான் அந்த கட்டடம் உருவாகிறது. சும்மா வந்து ஒரு கட்டிடம் எழுப்ப முடியாது. அந்த தூண்கள் திரைப்பட தொழிலாளர்கள்தான் என்று நடிகர் விஷால் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்