- Advertisement -
Homeபொழுதுபோக்குஎஸ்ஜே சூர்யாவை நடிக்க வைக்க போராடிய டைரக்டர் ஷங்கர் - அஜீத்குமாருடன் மோத தயாராகும் கேம்...

எஸ்ஜே சூர்யாவை நடிக்க வைக்க போராடிய டைரக்டர் ஷங்கர் – அஜீத்குமாருடன் மோத தயாராகும் கேம் சேஞ்சர்? அப்போ டிசம்பர் 20 என்னாச்சு?

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் 2 படம் பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்த்த நிலையில், மிகப்பெரிய பிளாப் படமாக போய்விட்டது. இதைத் தொடர்ந்து கேம் சேஞ்சர் படப்பிடிப்பில் இயக்குனர் ஷங்கர் தீவிரமாக இயங்கி வருகிறார். தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடித்துள்ள இந்த படத்தில் கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார்.

இந்தியன் 2 படம் படுதோல்வி அடைந்ததால், கேம் சேஞ்சர் படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக தரவேண்டும் என்பதில் ஷங்கர் தீவிர முனைப்பு காட்டி வருகிறார். இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் எஸ்ஜே சூர்யா நடிக்கிறார். அவர் பல படங்களில் இப்போது பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தியிலும் பரபரப்பாக நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்த சூழலில், கேம் சேஞ்சர் படத்தில் முக்கிய வில்லன் கேரக்டரில் எஸ்ஜே சூர்யா நடித்துள்ளார். அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் மற்றும் சில பேட்ச் ஒர்க் பணிகளும் இருப்பதால் 7 நாட்கள் ஷூட்டிங்கை படாதபாடுபட்டு நடத்தி முடித்துள்ளார். அதற்கு முக்கிய காரணம், எஸ்ஜே சூர்யா டைட் ஷெட்யூலில் பல படங்களில் நடித்து வருவதால், அவரது கால்ஷீட் கிடைப்பதே போராட்டமாக ஷங்கருக்கு மாறியிருக்கிறது. ஒருவழியாக எஸ்ஜே சூர்யா போர்ஷன் ஷூட்டிங்கை முடித்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து வருகிற டிசம்பர் 20ம் தேதி அல்லது 26ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை நாளில் கேம் சேஞ்சர் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஏற்கனவே டிசம்பர் மாதம் ரிலீஸ் என்ற அறிவிப்பை மாற்றி இப்போது பொங்கல் பண்டிகைக்கு கேம் சேஞ்சர் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதற்காக அறிவிப்பை நாளை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியாக உள்ளது.

- Advertisement -

வருகிற ஜனவரி 14ம் தேதி, பொங்கல் பண்டிகைக்கு கேம் சேஞ்சர் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதால், அப்போது அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படமும் ரிலீஸ் ஆகிறது. அதனால் விடாமுயற்சி, கேம் சேஞ்சர் படங்கள் மோதுவது உறுதியாகி விட்டது. ஏனெனில், குட் பேட் அக்லி படம், வருகிற ஏப்ரல் 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் வெளிவர உள்ள விடாமுயற்சி படமும், ஷங்கர் இயக்கத்தில் வெளிவரும் கேம் சேஞ்சர் படமும் ஒன்றுக்கொன்று போட்டியாக இருக்கும் என்றால், அதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் தெலுங்கில்தான் கேம் சேஞ்சர் படம் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது. தமிழில் துணிவு படத்துக்கு பிறகு 2 ஆண்டுகள் கழித்து வரும் அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படத்துக்கான வரவேற்பு பெரிய அளவில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்