நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் விடாமுயற்சி. 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான இந்த படம் குறித்த பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் படம் பார்த்தவர்கள் பெரிய ஏமாற்றத்தை சந்தித்தனர். அதனால் இந்த படம் கடும் விமர்சனத்தில் சிக்கியதால் ரூ. 200 கோடி வரை படத்தை தயாரித்த லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது.
இந்நிலையில் அஜீத்குமார் திரிஷா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்த குட் பேட் அக்லி படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் டீசர் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், படம் வேற லெவலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அஜீத்குமார் 3 கேரக்டர்களில் நடித்திருப்பதாக தெரிகிறது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியதாவது, குட் பேட் அக்லி படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்தான் தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்கிறார். கேரளாவில் கோகுலம் மூவிஸ் மூலமாகவும் கர்நாடகாவில் கேவிஎன் புரடக்சன்ஸ் மூலமாகவும் இந்த படத்தை ராகுல் ரிலீஸ் செய்கிறார்.
விஜய் நடித்த தி கோட் படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்தது ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்தான். அதில் பெரிய லாபம் கிடைத்தது போல் அஜீத் நடிப்பில் வெளியாகும் குட் பேட் அக்லி படமும் பெரிய லாபம் தரும் என்று அவர் நினைக்கிறார். அதனால் தி கோட் படம் ரிலீஸ் ஆன தியேட்டர்களை விட அதிக திரைகளில் இந்த படத்தை திரையிட அவர் முயற்சித்து வருகிறார். இது ஒரு விதத்தில் பெரிய ரிஸ்க் தான்.
குட் பேட் அக்லி படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸாகிறது. இது என்னதான் சூப்பரான படமாக இருந்தாலும் அதிகபட்சம் ஒருவாரம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடும். 2வது வாரத்தில் சனி ஞாயிறு போன்ற வாரத்தின் கடைசி நாட்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அவ்வளவுதான். குட் பேட் அக்லி படம் 2 வாரங்களுக்கு மேல் தியேட்டர்களில் தங்காது.
அதனால் குட் பேட் அக்லி ரிலீஸ் நாளில் சிங்கிளாக வெளியாக வாய்ப்பிருந்தாலும் ஏப்ரல் 17ம் தேதி பெரிய படங்கள் ரிலீஸ் இருந்தால் ஒருவேளை தள்ளி வைப்பார்கள். ஆனால் ஏப்ரல் 24ம் தேதி வழக்கம்போல புதிய படங்களை ரிலீஸ் செய்வார்கள். அப்போதும் குட் பேட் அக்லி அஜீத் படம் தியேட்டரில் ஓடுகிறதே என்று யாரும் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க மாட்டார்கள் என்று வலைப்பேச்சு ஜெ பிஸ்மி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





