- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா, திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் கைகோர்த்த பாஜக குஷ்பு, காசுக்காக இப்படியா?...

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா, திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் கைகோர்த்த பாஜக குஷ்பு, காசுக்காக இப்படியா? – கலாய்க்கும் நெட்டிசன்கள்

- Advertisement -

சினிமாவில் நடித்து முன்னணி நடிகர், நடிகைகளாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகும் சிலர் ஒரு கட்டத்தில் அரசியலுக்கு வந்துவிடுகின்றனர். அதுவும் சினிமாவில் போதிய வாய்ப்பில்லாத பட்சத்தில் சீரியலுக்கு போகின்றனர். அங்கும் வரவேற்பு இல்லாத பட்சத்தில் அரசியல் பக்கம் ஒதுங்குகின்றனர்.

சினிமா பிரபலம் என்ற ஒரே காரணத்துக்காக, கூட்டம் சேரும் ஆசையில் அரசியல் கட்சிகளும் உடனே சேர்த்துக் கொள்கின்றன. அப்படி அரசியலுக்கு வந்தவர்களில் மிக முக்கியமானவர் நடிகை குஷ்பு. துவக்கத்தில் திமுகவுக்கு சென்ற அவர், சில ஆண்டுகள் கருணாநிதி, ஸ்டாலின் புகழ் பாடினார். பிறகு கனிமொழி அவரை ஓரம்கட்ட ஆரம்பித்தார்.

- Advertisement -

அதன்பின் திமுகவை விட்டு வெளியேறி குஷ்பு, காங்கிரஸ்சில் இணைந்தார். அங்கு சில ஆண்டுகள் காலம் தள்ளிய குஷ்பு மேடைகளில் பாஜகவை கண்டபடி திட்டினார். ராகுல்ஜி இவிகேஎஸ் இளங்கோவன்ஜி என புகழ்பாடிய அவர், காங்கிரஸிலும் தனக்கு முக்கியத்துவம் இல்லை என உணர்ந்து அங்கிருந்தும் வெளியே வந்துவிட்டார்.

அதன்பின் பாஜகவில் இணைந்த குஷ்புவுக்கு, தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினர் பதவி தரப்பட்டதால், மோடிஜி புகழ் பாடி வருகிறார். நிறைய வருமானமும் பார்த்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், பாஜக ஆதரவாளரான குஷ்பு, திமுகவுடன் இன்னும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங்கில் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

- Advertisement -

அதாவது, வரும் 26ம் தேதி சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தை தயாரித்தவர் நடிகை குஷ்பு மற்றும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம். குஷ்பு பாஜக சார்ந்தவர். அதே போல் ஏசி சண்முகமும் இப்போது பாஜக கூட்டணியில் இருக்கிறார். ஆக, இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் இருவருமே பாஜக சார்ந்தவர்கள் என்பது உறுதியாக தெரிகிறது.

இந்நிலையில் அரண்மனை 4 படத்தை வௌியிடுவது திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயின்ட் முவீஸ் நிறுவனம்தான். ஆனால் நேரடியாக அந்த பெயரில் படத்தை வெளியிடாமல், அந்நிறுவனத்தின் பேனரில் செண்பகமூர்த்தி என்பவர் பெயரில் பினாமியாக இந்த படத்தை வெளியிடுகின்றனர். அரசியல் மேடைகளில் பாஜக – திமுக மோதல் மக்களை ஏமாற்றத்தான். மற்றபடி தொழில், வருமானம் என வரும்போது அவர்கள் கட்சி பாகுபாடு எல்லாம் எதுவுமின்றி காசு பணம் துட்டு மணி மணி என கைகோர்த்து கொள்கின்றனர் என நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்