- Advertisement -
Homeபொழுதுபோக்குகவின் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான பிளடி பெக்கர் படம்; ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?...

கவின் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான பிளடி பெக்கர் படம்; ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? – இப்பவாவது மக்கள் படத்தை பார்ப்பார்களா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருப்பவர் கவின். விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் அறிமுகமான கவின், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற வகையில் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தார். ஆனால் அவர் பிக்பாஸ் வின்னராக வெற்றி பெறவில்லை.

பிறகு சினிமாவில் நடித்த கவினுக்கு டாடா படம் பெரிய வெற்றியை தேடிக்கொடுத்தது., அடுத்து கொரோனா தொற்று காலகட்டத்தில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான லிபட் படமும் கவினுக்கு பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அடுத்து வெளியான ஸ்டார் படத்திலும் கவின் நடிப்பு பேசப்பட்டது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து தற்போது கவின் பிச்சைக்காரன் கேரக்டரில் நடித்த பிளடி பெக்கர் படம், கடந்த தீபாவளியன்று வெளியானது. ஜெயிலர் பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம், பிலமென்ட் பிக்சர்ஸ் சார்பில் பிளடி பெக்கர் படத்தை தயாரித்தார். நெல்சனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிவபாலன் இந்த படத்தை இயக்கினார்.

பிளடி பெக்கர் படத்தில் கவின் மற்றும் ரெடின் கிங்ஸ்லி, சுனில் சுகாதா, மாருதி பிரகாஷ் ராஜ், அக்‌ஷயா ஹரிகரன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருந்தார். ஆனால் இந்த படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. மொத்தமாக ரூ. 10 கோடி மட்டுமே வசூலித்தது.

- Advertisement -

இந்த படத்தை தமிழ்நாட்டில் தியேட்டர்களுக்கு வினியோகம் செய்த வகையில் பைவ் ஸ்டார் கதிரேசன் என்ற வினியோகஸ்தருக்கு ரூ. 8 கோடி வரை நஷ்டம் ஏற்பட்ட நிலையில், அதில் ரூ. 5 கோடியை திருப்பித் தருவதாக பிளடி பெக்கர் படத்தின் தயாரிப்பாளர் நெல்சன் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு இந்த படம் தயாரிப்பாளர், வினியோகஸ்தர் என இரு தரப்புக்கும் பலத்த நஷ்டத்தை தந்துள்ளது.

கடந்த தீபாவளியன்று வெளியான பிளடி பெக்கர் படம், ஓடிடி தளத்தில் வெளியாகும் தகவல் உறுதியாகி உள்ளது. அதன்படி வருகிற 29ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பிளடி பெக்கர் படம் ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலவவையான விமர்சனம் காரணமாக தியேட்டரில்தான் இந்த படத்தை ரசிகர்கள் பார்க்க மறுத்துவிட்டனர். ஓடிடி தளத்திலாவது பிளடி பெக்கரை ரசிகர்கள் பார்ப்பார்களா என படக்குழுவினர் எதிர்பார்த்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்