- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி ஒரு பச்சோந்திதனத்தை யாரும் செய்தது இல்லை - கதறுங்க தலீவரே கதறுங்க - நடிகர்...

இப்படி ஒரு பச்சோந்திதனத்தை யாரும் செய்தது இல்லை – கதறுங்க தலீவரே கதறுங்க – நடிகர் ரஜினியை விளாசித் தள்ளிய பிரபலம்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நேற்று விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் ரிலீஸ் குறித்து கேட்டதற்கு நோ கமெண்ட்ஸ் நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என்று விலகிக் கொண்டார். இதுகுறித்து சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன், தனது எக்ஸ் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தனது பதிவில் விஜய்யை கண்டு அலறும் தலீவர் என்ற தலைப்பில் ப்ளு சட்டை மாறன் கூறியிருப்பதாவது, இந்த தேர்தலில் தவெக தோற்றால் திமுக அதிமுக நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை விட பெரிய மகிழ்ச்சியில் இருக்கப்போவது தலீவர் தான். ஆனால் சினிமா வியாபாரத்தில் இவரை எப்போதோ முந்திவிட்டார் விஜய்.

- Advertisement -

இந்த தேர்தலில் தவெக தோற்றால் அடுத்த முறை ஜெயிக்கலாம். அப்போது அழுது புலம்பப் போவதும் தலீவர் தான். 25 வருடங்களாக அரசியலுக்கு இதோ வரேன் அதோ வரேன் என ரசிகர்கள் தலையில் மிளகாய் அரைத்து படங்களை ஹிட் ஆக்கிக் கொண்டு பல கோடி சம்பாதித்தார். 2021 தேர்தலில் கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடிப்பேன் என கூறினார்.

கடைசியில் உடல்நிலை சரியில்லை எனக்கூறி அரசியலுக்கு வராமல் தப்பினார். 25 வருடங்களாக காத்திருந்து பெரிய ஏமாற்றம் அடைந்தாலும் அவர் உடல்நிலை தான் முக்கியம் என ஆறுதல் அடைந்தனர் ரசிகர்கள். ஆனால் அதன்பிறகு வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஒரு பச்சோந்தித்தனத்தை யாரும் செய்ததில்லை.

- Advertisement -

சிரஞ்சீவி பவன் கல்யாண் எம்ஜிஆர் விஜயகாந்த் சரத்குமார் விஜய் உள்ளிட்ட யாரும் இப்படி ரசிகர்களை ஏமாற்றவில்லை. சொன்னபடி அரசியலுக்கு வந்தார்கள். வெற்றி தோல்வி இரண்டாம் பட்சம். இத்தேர்தலில் தவெக தோற்றாலும் அடுத்து வரும் உள்ளாட்சி நாடாளுமன்றம் சட்டமன்ற தேர்தலில் சில பல இடங்களில் ஜெயிக்கலாம். ஆகவே தலீவரின் சந்தோசம் நிலையானதாக இருக்காது.

சினிமா மற்றும் அரசியலில் உங்களை விட பெரிய இடத்தை விஜய் பிடித்து விட்டார். அவருக்கு கூடும் பிரம்மாண்ட இளைஞர் கூட்டத்தை டிவியில் கண்டு கடுப்பாகிவிட்டார் தலீவர். அதனால்தான் விஜய் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவருக்கு எதிராக மறைமுக பதில்களை தந்து வருகிறார். கதறுங்க தலீவரே கதறுங்க என்று ப்ளு சட்டை மாறன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்