- Advertisement -
Homeபொழுதுபோக்குஅண்ணே நான் எறங்கி வரவா... மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் லியோ... அதற்கான காரணம் இதோ...

அண்ணே நான் எறங்கி வரவா… மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் லியோ… அதற்கான காரணம் இதோ…

- Advertisement -

இந்த ஆண்டு தமிழ் சினிமா அல்ல ஒட்டுமொத்த இந்திய திரை உலகிலும் தேடப்பட்ட விஷயம் லியோ படத்தை பற்றிய ஆகத்தான் இருக்கும். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக விஜய் உடன் கூட்டு சேர்ந்த இந்தத் திரைப்படத்திற்கு, எக்கச்சக்க எதிர்ப்பார்ப்பு இருந்தது.

விக்ரம் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் அறிமுகப்படுத்திய என் சி யு கான்செப்டே இதற்கு முக்கிய காரணம் என்று கூறலாம். இப்படியான சூழலில் கடந்த மாதம் 19ஆம் தேதி திரையரங்குகளில் லியோ ரிலீஸ் செய்யப்பட்டது. ஆயுத பூஜை விடுமுறையை டார்கெட்டாக வைத்து படம் வெளியானதால், வசூலில் வேற லெவலில் சாதனை புரிந்தது.

- Advertisement -

ஆனால் படம் சுமாராகத்தான் உள்ளதாகவும், வசூலும் அந்த அளவுக்கு பெரியதாக இல்லை என்றும் சினிமா பட விமர்சகர்கள் கூறினர். ஆனால் அது எல்லாம் காதிலேயே வாங்கிக் கொள்ளாத லியோ பட தயாரிப்பு நிறுவனம், ஒரே வாரத்தில் 461 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அறிவித்தது. கிட்டத்தட்ட லியோ திரைப்படம் 600 கோடி ரூபாய் அளவுக்கு வசூலை ஈட்டி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இது ஒரு புறம் இருக்க, படத்தின் முதல் பாதி நன்றாக இருந்ததாகவும் ஆனால் இரண்டாம் பாதி சுமாராகத்தான் உள்ளது என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இதனை லோகேஷ் கனகராஜ் ஒப்புக்கொண்டார். அதேசமயம் படத்தின் வெற்றி விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில், படம் ரிலீசான இரண்டு வாரங்களில் தீபாவளி பண்டிகை வந்ததால் லியோ திரைப்படம் பல்வேறு திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டது. கார்த்தியின் ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய இரண்டு திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகின. ஆனால் ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், அது பி மற்றும் சி சென்டர்களில் எடுபடவில்லை. இதனால் மீண்டும் லியோ படத்தையே வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு எடுத்துள்ளனர். மல்டிபிளக்ஸ் மற்றும் பெரிய திரையரங்குகளில் லியோவின் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. கிடைக்கிற வரைக்கும் லாபம் என இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். லியோ திரைப்படம் மீண்டும் வெளியாகி இருப்பதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்