சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “மாவீரன்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எனினும் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மிகவும் ஸ்லோவாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக ஒரு காட்சியில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே ஒரு குழந்தை மாட்டிக்கொள்ள அந்த குழந்தையை சிவகார்த்திகேயன் காப்பாற்றுவது போன்ற ஒரு காட்சி இருந்தது. இந்த காட்சி ஒரு வழக்கமான காட்சி என்று பலரும் கிண்டல் செய்து வந்தனர்.

தமிழ் சினிமாவில் இந்த காட்சி மிகவும் புளித்துப்போன காட்சி எனவும், இன்னும் எத்தனை காலம்தான் இப்படி எல்லாம் காட்சி வைப்பீர்கள் எனவும் ரசிகர்களிடையே அதிருப்தி எழுந்தது. இந்த நிலையில் சர்ச்சைக்கு பெயர் போன சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், தனது சமூக வலைத்தளத்தில் அந்த காட்சியை மிகவும் பங்கமாக கலாய்த்துள்ளார்.
டிவிட்டரில் ஒருவர், “அதான் பில்டிங் இடியப்போகுதுன்னு தெரியும்ல, அப்ரம் ஏம்மா குழந்தையை வீட்டுக்குள்ளயே விட்டுட்டு வந்த… அப்போதான் சார் ஹீரோ போய் காப்பாற்ற முடியும்” என்று கிண்டல் செய்திருந்தார். இந்த டிவிட்டை ஷேர் செய்த ப்ளூ சட்டை மாறன், “ Cringeness Maxx எம்.ஜி.ஆர், ரஜினி படங்கள் முதல் CSK படங்கள் வரை, எரியும் அல்லது இடியப்போகும் வீட்டினுள் குழந்தையை தவிக்கவிட்டு வெளியே ஓடி வரும் அம்மாக்கள், மிகவும் சுயநலம் பிடித்தவர்கள், யாரும்மா நீங்க எல்லாம்?” என்று குறிப்பிட்டு கேலி செய்திருக்கிறார். இந்த டிவிட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரபல சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் இவ்வாறு “மாவீரன்” திரைப்படத்தை கேலி செய்துள்ளது சிவகார்த்திகேயன் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.
Cringeness Maxx:
எம்.ஜி.ஆர், ரஜினி படங்கள் முதல் CSK படங்கள் வரை.. எரியும்/இடியப்போகும் வீட்டினுள் குழந்தையை தவிக்க விட்டு வெளியே ஓடிவரும் அம்மாக்கள்..
Very Selfish. யாரும்மா நீங்க எல்லாம்? pic.twitter.com/eS2tdg2WKh
— Blue Sattai Maran (@tamiltalkies) July 21, 2023





