சிவகார்த்திகேயன் சாய்பல்லவி நடிப்பில் அமரன் என்ற மாஸ் ஹிட் படத்தை தந்தவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. இந்த படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பின் 100 நாட்களுக்கு மேல் திரையில் ஓடிய படமாகவும் இருந்தது. இந்த படம் ரூ. 325 கோடி வரை உலகளவில் வசூல் சாதனையும் படைத்தது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் இந்த அமரன் படத்தை நடிகர் கமல்ஹாசனே சொந்தமாக தயாரித்தும் இருந்தார். இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த 20க்கும் மேற்பட்ட படங்களில் முதன்முறையாக மிக அதிக வசூலை பெற்றுத் தந்த படமாகவும் அவருக்கு அமைந்தது. அதனால் தனது சம்பளத்தை சிவகார்த்திகேயன் ரூ. 75 கோடியாகவும் உயர்த்தி இருக்கிறார்.
அமரன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்க இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கமிட் ஆனார். மதுரையை சேர்ந்த தயாரிப்பாளர் அன்பு செழியன் தயாரிப்பில் கோபுரம் பிலிம்ஸ் சார்பில் இந்த படம் தயாரிக்க ஏற்பாடுகள் நடந்தது. சில மாதங்களுக்கு முன் நடந்த பட பூஜை துவக்க விழாவில் தனுஷ் ராஜ்குமார் பெரியசாமி மதுரை அன்பு செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த சூழலில் நடிகர் தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இட்லி கடை ஆகிய படங்களை டைரக்ட் செய்து முடித்து விட்டார். தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்திலும் நடித்து முடித்து விட்டார். அதன்பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதாவது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் தனுஷ் நடிக்கும் நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் மொத்தம் ரூ. 175 கோடி என்று சொல்லப்படுகிறது. தனுஷ் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அதே நேரத்தில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியும் அமரன் என்ற பெரிய ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார்.
என்றாலும் ரூ. 175 கோடி என்ற மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் மதுரை அன்பு செழியன் தயக்கம் காட்டுகிறார். அதனால் இந்த படத்தின் கதை மாற்றப்படலாம் அல்லது தயாரிப்பாளரே மாறலாம். எப்படி இருப்பினும் இரண்டில் ஒன்று நிச்சயமாக மாறும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.





