நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படம் ஆகஸ்ட் பத்தாம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இருந்து ஸ்டார் நடிகர்கள் இந்தப் படத்தில் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. நிச்சயம் படம் பந்தயம் அடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் ரசிகர்கள்.
சூழல் இப்படி இருக்க ரஜினிக்கும், விஜய்க்கும் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது. வியாபாரத்தில் விஜய்தான் நம்பர் 1 என அவரது ரசிகர்கள் பேச; அதற்கு ஹுக்கும் பாடல் வரிகள் மூலம் ரஜினி பதிலடி கொடுத்துவிட்டார் என ரஜினி ரசிகர்கள் கூற சமூக வலைதளமே அல்லோலகல்லோலப்பட்டிருக்கிறது. இந்தப் பஞ்சாயத்து விரைவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினியின் பேச்சு அந்தப் பஞ்சாயத்தை மேலும் பலமாக்கியது.
கடந்த 28ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய ரஜினிகாந்த், காக்கா கழுகு கதையை கூறி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாமென்று 1977ஆம் ஆண்டே சொன்னேன் என பேசினார். அவர் கூறிய கதையில் காக்கா என்று விஜய்யைத்தான் ரஜினி சொல்கிறார் என்ற சர்ச்சை எழுந்தது. எனவே அடுத்து நடக்கவிருக்கும் லியோ படத்தின் ஆடியோ லான்ச்சில் விஜய் என்ன பேசப்போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இந்த விவகாரம் ஆரம்பித்ததில் இருந்தே ப்ளூ சட்டை மாறன் ரஜினிகாந்த்தை பருந்து குஞ்சு என்று சொல்லி பங்கமாக கலாய்த்துவருகிறார். நேற்று ட்ரெய்லர் வெளியானதிலிருந்து வேறு ஒரு வார்த்தையை சொல்லி கலாய்த்துவருகிறார். அதாவது ட்ரெய்லரில் ரஜினிகாந்த் ஒரு அளவு வரைக்கும்தான் நமட்ட பேச்சு; அதுக்கப்புறம் வீச்சுதான் என்ற வசனம் பேசுவார். அதை பிடித்துக்கொண்ட ப்ளூ சட்டை மாறன் வீச்சு பரோட்டா என கலாய்த்துவருகிறார்.
இனி வீச்சுதான். pic.twitter.com/HfwcsOmvQw
— Blue Sattai Maran (@tamiltalkies) August 2, 2023
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “டிக்கட் கிடைக்காத ரஜினி ரசிகர்கள் அதிருப்தி பேட்டி. மது குடிக்க வேண்டாமென தலைவர் பேசிய அரங்கில் மது பாட்டில் சப்ளை? ப்ளாக் டிக்கட் விற்ற போலி பவுன்சர். இதுகுறித்து வாய் திறக்குமா வீச்சு பரோட்டா என கேள்வி எழுப்பியிருக்கிறார். அதேபோல் இன்னொரு ட்வீட்டில் இனி வீச்சுதான் என சொல்லி முட்டை வீச்சு பரோட்டா புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
Jailer Audio Launch – Polimer News:
* டிக்கட் கிடைக்காத ரஜினி ரசிகர்கள் அதிருப்தி பேட்டி.
* மது குடிக்க வேண்டாமென தலைவர் பேசிய அரங்கில் மது பாட்டில் சப்ளை?
* ப்ளாக் டிக்கட் விற்ற போலி பவுன்சர்.
இதுகுறித்து வாய் திறக்குமா வீச்சு பரோட்டா? pic.twitter.com/W3hZXRsnXP
— Blue Sattai Maran (@tamiltalkies) August 3, 2023
முன்னதாக ஆடியோ வெளியீட்டு விழாவில், ’மது பழக்கம் இருந்தால் அதை விட்டுவிடுங்கள். தினமும் குடித்தால் குடும்பத்தில் இருப்பவர்களின் நிம்மதி போகும். தினமும் குடிக்காதீர்கள். நான் அளவுக்கு அதிகமாக மது எடுத்துக்கொண்டிருந்தேன். அதை மட்டும் செய்யாமல் இருந்திருந்தால் இப்போது இருக்கும் இடத்தைவிடவும் இன்னும் உயரமான இடத்துக்கு சென்றிருப்பேன்’ என கூறியிருந்தார். சூழல் இப்படி இருக்க அவர் இவ்வாறு பேசிய அரங்கத்திலேயே மது சப்ளை நடந்திருப்பதாக கூறப்படுவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.





