- Advertisement -
Homeபொழுதுபோக்குகடந்த 5 நாட்களில் டிமாண்டி காலனி 2 வசூல் இத்தனை கோடியா? விமர்சனங்களுக்கு பதிலடி தந்த...

கடந்த 5 நாட்களில் டிமாண்டி காலனி 2 வசூல் இத்தனை கோடியா? விமர்சனங்களுக்கு பதிலடி தந்த நடிகை பிரியா பவானி ஷங்கர் – கம்பேக் கொடுத்தாரா ஹீரோ அருள்நிதி?

- Advertisement -

கடந்த வியாழன் அன்று, சுதந்திர தினத்தன்று தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் டிமாண்டி காலனி 2, கீர்த்தி சுரேஷ் நடித்த ரகுதாத்தா ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் மூன்று படங்களுமே ஓரளவுக்கு ரசிகர்களை திருப்திபடுத்திய படங்களாக இருக்கின்றன.

எனினும் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் படத்துக்கு கலவையான விமர்சனங்களே அதிகமாக வருகின்றன. படத்தில் இடம்பெற்ற வசனங்கள் சரியாக புரியவில்லை. தங்கவயல் அடிமைத் தொழிலாளர்கள் பற்றிய வலியை, வேதனையை பதிவு செய்யாமல் ரஞ்சித் தன் அறிவாளித்தனத்தை காட்டியிருக்கிறார் என்றெல்லாம் கடுமையான விமர்சனங்கள் வருகின்றன.

ஆனால் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 9 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த திகில் படம் டிமாண்டி காலனியின் தொடர்ச்சியாக, டிமாண்டி காலனி 2 படம் ரிலீஸாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. கோப்ரா தோல்வி படத்தை தந்த அஜய் ஞானமுத்து, இந்த படம் மூலம் அந்த சரிவில் இருந்து மீண்டு வந்துவிட்டார் என்று ரசிகர்கள் பாராட்டி, வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி பல நல்ல படங்களில் நடித்த நடிகர் அருள்நிதி, சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த நிலையில், அவரது நடிப்பில் வெளிவந்துள்ள டிமாண்டி காலனி 2, பெரிய அளவில் வெற்றியை கொடுத்துள்ளது. அதுவும் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் சில காட்சிகளில் அவரது டெரர் நடிப்பு, வேற லெவலில் ரசிகர்களிடம் பாராட்டை பெற்று வருகிறது. நிச்சயம் இது அருள்நிதிக்கு கம்பேக் படம்தான் என்கின்றனர் ரசிகர்கள்.

நல்ல நடிப்பு திறனும், அழகும் நிறைந்த நடிகை பிரியா பவானி ஷங்கர் குறித்து சிலர், ராசியில்லாத நடிகை என்று விமர்சனம் செய்து வந்தனர். அதற்கு பதிலடி தரும் விதமாக டிமாண்டி காலனி 2 படத்தில் கதையின் முக்கிய பாத்திரமாக, கதாநாயகியாக நடித்து படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருக்கிறார் பிரியா பவானி ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து டிமாண்டி காலனி 2 படத்துக்கு கிடைத்துவரும் பாசிட்டிவ் விமர்சனங்களால், தியேட்டர்களில் ரசிகர் கூட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த வியாழன் அன்று டிமாண்டி காலனி 2 படம் ரிலீஸான நிலையில், நேற்று வரை 5 நாட்களில் மொத்தம் 23 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது டிமாண்டி காலனி 2 படக்குழுவினரை உற்சாகமடைய செய்துள்ளது. அடுத்து டிமாண்டி காலனி 3, டிமாண்டி காலனி 4 படங்களும் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சற்று முன்