- Advertisement -
Homeபொழுதுபோக்குயோக்கிய வேஷம் போடுறது.. ஆனா கில்மாத்தனம் பண்ணுறது.. சீனு ராமசாமி மீது ப்ளூ சட்டை மாறன்...

யோக்கிய வேஷம் போடுறது.. ஆனா கில்மாத்தனம் பண்ணுறது.. சீனு ராமசாமி மீது ப்ளூ சட்டை மாறன் அட்டாக்

- Advertisement -

த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசியது கோலிவுட்டில் பெரும் புயலை கிளப்பியது. திரையுலகின் கண்டனம், காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு என பல்வேறு படிநிலைகளை கடந்து தற்போது மன்சூர் அலிகான் மன்னிப்பும் கேட்டுவிட்டார். அவர் விஷயத்துக்கு அடுத்ததாக பரபரப்பை ஏற்படுத்திய விஷயம் எனன்வென்றால் அது விசித்திரா பிக்பாஸில் பேசியதுதான்.

டாப் ஹீரோ தன்னை படுக்கைக்கு அழைத்ததாக அவர் கூற; அந்த ஹீரோ பாலகிருஷ்ணாதான் என நெடிசன்கள் கூற சமூக வலைதளமே அதகளமாக இருக்கிறது. சூழல் இப்படி இருக்க மூன்றாவதாக கோலிவுட்டில் ஒரு புயல் கிளம்பியிருக்கிறது. அது சீனு ராமசாமி – மனிஷா யாதவ் விஷயம்தான். அந்த புயல் கிளம்ப முக்கிய காரணம் யார் என்றால் அது பத்திரிகையாளர் பிஸ்மிதான்.

- Advertisement -

அவர் சமீபத்தில் ஒரு தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “சீனு ராமசாமி இயக்கிய இடம் பொருள் ஏவல் படத்தின் ஷூட்டிங்போது நடிகை மனிஷா யாதவ்வுக்கு சீனு ராமசாமி எவ்வளவு பாலியல் தொல்லைகள் கொடுத்தார் என்பது எனக்கு தெரியும். அதனை மனிஷாவே எனக்கு ஃபோன் செய்து சொன்னார். என்னிடம் அத்தனை வாக்குமூலமும், ஆதாரமும் இருக்கிறது. அந்தப் படத்திலிருந்து அவர் ஒரு வாரத்தில் விலக அதுவே காரணம்” என்றார்.

அவரது இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்த சீனு ராமசாமியோ மனிஷா யாதவ் தனக்கு நன்றி சொல்லும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இவரா என்னால் சினிமாவிலிருந்து ஒதுங்கினார் என கேள்வி எழுப்பினார். நிலைமை இப்படி இருக்க இந்த விவகாரம் போகப்போக பூதாகரமாகும் நிலைதான் தற்போது நிலவிவருகிறது.

- Advertisement -

இந்நிலையில் திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இயக்குனர் ‘சக்கரை’ ராமசாமி பற்றி பிஸ்மி அளித்த பேட்டியை தனது யூட்யூப் தளத்தில் இருந்து நீக்கியுள்ளதாம் சேனல். தவறு செய்தவர்கள்தான் தடயத்தை அழிக்க துடிப்பார்கள். உங்கள் வலியுறுத்தலால்தான் அந்த வீடியோ நீக்கப்பட்டதாம். உண்மையா ‘சக்கரை’ ராமசாமி? அப்ப உங்க மேல தப்பு இருக்குன்னுதான அர்த்தம்?

வெளில பரம யோக்யன் வேஷம் போடுறது. ஆனால் உள்ளே பண்றது எல்லாம் கில்மாத்தனம். எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டாங்களோ? வாய்ப்பு கேட்டு வந்த இளம்பெண்ணை Molestation பண்ணி… அவங்க அழுதுட்டே வெளிய போனாங்களாமே? ஏன்யா இப்படி இருக்கீங்க? பெண்கள் எல்லாம் இனி பயப்படாம தைரியமா புகார் அளிக்கவும். மீடியாவுலயும் பேசுங்க‌. சாயம் வெளுக்கட்டும்” என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்