- Advertisement -
Homeபொழுதுபோக்குரோமியோ, கள்வன், ஆவேசம் படங்கள் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ்; எந்த தளங்களில் வெளியாகுது தெரியுமா?...

ரோமியோ, கள்வன், ஆவேசம் படங்கள் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ்; எந்த தளங்களில் வெளியாகுது தெரியுமா? – ரசிகர்கள் ஆர்வம்

- Advertisement -

தமிழ் சினிமாவில் தியேட்டர்களில் புதிய படங்கள் ரிலீஸாவதை காட்டிலும் இப்போது ஓடிடி தளங்களில் படம் எப்போது ரிலீஸ் ஆகிறது என்று எதிர்பார்க்கும் ரசிகர் கூட்டம் மிக அதிகமாகிவிட்டது. ஏனெனில் தியேட்டரில் ஒரு டிக்கெட் விலை 200 ரூபாய் என்ற நிலையில், ஒருவர் தனது குடும்பத்துடன் பார்க்க வேண்டும் என்றால், ஆயிரம் ரூபாய்க்கு மேல் டிக்கெட்கள் வாங்க வேண்டி இருக்கிறது

இது தவிர போக்குவரத்து செலவு, இண்டர்வெலில் ஸ்நாக்ஸ் செலவு என அதுவும் ஆயிரம் ரூபாய் கரைந்துவிட்டால் ஒரு சினிமா பார்க்க ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர், 2000 ரூபாய் வரை செலவழிக்க வேண்டி இருக்கிறது. எனவே தியேட்டரில் படம் பார்ப்பதைவிட ஓடிடி தளங்களில் படம் பார்ப்பதில் சினிமா ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்

- Advertisement -

அந்த வகையில் இந்த வாரம் ஓடிடி தளத்தில் முக்கியமான படங்கள் ரிலீஸ் ஆகின்றன. குறிப்பாக நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் ரோமியோ. இந்த படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்த படத்தில் மிருணாளினி, டிவிடி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற இந்த படம் மே 10ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது

இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கிய ஆவேசம் படம் வரும் 9ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த படத்தில் பகத் பாசில், மன்சூர் அலிகான், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 11ம் தேதி தியேட்டரில் வெளியான இந்த படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த இந்த படம், வரும் மே 9ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

- Advertisement -

டார்க் ரூம் பிக்சர்ஸ், நோவா ஃபிலிம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கிய தி பாய்ஸ் படம், வரும் இன்று 7ம் தேதி முதல் ஆஹா ஓடிடி தளத்தில் பார்க்கலாம். இந்த படம் இன்றே வெளியாகி விட்டது. ஆர் என் ஹர்ஷ்வர்தன் இயக்கிய சஸ்பென்சர் திரில்லர் படம் சித்திரம் சுதாரா. இந்த படம் வரும் 9ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது.

அதேபோல் அறிமுக இயக்குனர் பிவி ஷங்கர் இயக்கத்தில் உருவான படம் கள்வன். ஜி வி பிரகாஷ், இவானா, பாரதிராஜா, விஜய் டிவி தீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படம், கடந்த மாதம் தியேட்டரில் வெளியானது.வரும் 10ம் தேதி ஹாட் ஸ்டார், தென்கோட்டா ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகிறது. இந்த வாரம் ரிலீஸ் ஆகும் இந்த படங்களை ஓடிடி தளங்களில் காண ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்