கடந்த 2023ம் ஆண்டில் விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் மாயா கிருஷ்ணன். இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவரது சகோதரி ஸ்வாகதா கிருஷ்ணன். பின்னணி பாடகியாக இருந்த அவர் சில படங்களில் சில பாடல்களும் பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் ஒருவரிடம் பல ஆண்டுகள் பணி செய்திருக்கிறார்.
பின்னணி பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றார். ப்போது ஒரு இசையமைப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்தார். இசையமைப்பாளரின் பெயரை குறிப்பிடாமல் பேசிய பாடகி ஸ்வாகதா, அந்த இசையமைப்பாளர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்.
அதை தனது கேமராவிலும் பதிவு செய்தார். தன்னிடம் இருந்த பணத்தைப் பறித்தார். எனக்கு சரியாக சம்பளமும் தரவில்லை. அவரால் பல துன்பங்களை நான் அனுபவித்தேன். இப்போது ரிஷிகேசில் இருந்து வருகிறேன் என்றும் அந்த நேர்காணலில் ஸ்வாகதா கிருஷ்ணன் கூறியிருந்தார். பாடகி ஸ்வாகதா இசையமைப்பாளர் மீது கூறிய குற்றச்சாட்டு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் அவர் குறிப்பிட்ட இசையமைப்பாளரின் பெயரை சொல்லாமல் தவிர்த்தது ரசிகர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இத்தனை விஷயங்களை வெளிப்படையாக சொன்ன பாடகி ஸ்வாகதா இசையமைப்பாளரின் பெயரையும் தைரியமாக துணிச்சலாக மக்கள் மத்தியில் தெரிவித்திருக்க வேண்டும் என்று பலரும் கூறியிருந்தனர். இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், பாடகி ஸ்வாகதாவுக்கு ஆதரவாக தனது கருத்துக்களை ஒரு பதிவில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தனது வலைதள பக்கத்தில் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, இதற்காக நான் பல ஆண்டுகளாக காத்திருந்தேன். பொறுமையாகவும் அமைதியாகவும் இந்த பயணத்தில் என்னை நானே தேற்றிக் கொள்ள முயன்று கொண்டும் இருந்தேன். என் இதயத்தின் ஆழத்தில் இன்று நான் தேவியையும் அவள் எனக்கு வழங்கியிருக்கும் வலிமையையும் உணர்கிறேன்.
இன்று அசைக்க முடியாத உறுதியுடன் இந்த போராட்டத்தில் நான் ஒரு வலிமையான மற்றும் தீர்க்கமான அடியை முன்னோக்கி எடுத்து வைக்கிறேன். அல்லது இதை மகிஷாசுரமர்தனம் என்று சொல்லலாமா? அவளுடைய தாண்டவம் ஆக்ரோஷமானதாகவும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு பிரமாண்டமானதாகவும் இருக்க போகிறது. நீதி கிடைக்க வேண்டும் என்று அந்த பதிவில் ஸ்வாகதா கிருஷ்ணன் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





