- Advertisement -
Homeபொழுதுபோக்குஎல்லாம் லியோ புண்ணியம்.. அப்பாடா நம்மள மறந்துட்டாங்க.. சிவகார்த்திகேயனை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்

எல்லாம் லியோ புண்ணியம்.. அப்பாடா நம்மள மறந்துட்டாங்க.. சிவகார்த்திகேயனை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்

- Advertisement -

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன் பெரும்பாலும் எந்த சர்ச்சையிலும் சிக்கிக்கொள்ளாதவர். ஆனால் அவர் குறித்து டி..இமான் சமீபத்தில் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையானது. அதாவது, “சிவகார்த்திகேயனோடு இந்த ஜென்மத்தில் இணையமாட்டேன். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார். அந்த துரோகத்தை என்னால் மறக்க முடியாது. எனது குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி அது என்ன துரோகம் என்று வெளியில் சொல்லமாட்டேன்.” என அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார்.

சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று இமான் சொல்லியதை அடுத்து பலரும் அந்தத் துரோகம் என்னவாக இருக்கும் என்பது கூறித்து ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தனர். அதன்படி இமானுக்கும் அவரது முதல் மனைவி மோனிகாவுக்கும் நடந்த விவாகரத்துக்கு காரணமே சிவகார்த்திகேயன்தான் என்று கூற ஆரம்பித்தன.

- Advertisement -

ஆனால் அதனை மோனிகா திட்டவட்டமாக மறுத்தார். இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த மோனிகா, எங்களுடைய குடும்ப நண்பர் சிவகார்த்திகேயன். அவர் ரொம்பவே நாகரீகமான மனிதர். இமானுக்கும் அவருக்கும் நல்ல நட்பு உண்டு. நண்பர் என்ற முறையில் எங்கள் குடும்பத்தின் மேல் அக்கறையாகவே இருப்பார். என்னுடைய மகள்களுக்கும் அவரை பிடிக்கும். இமான் எடுத்த விவாகரத்து முடிவுக்கு சப்போர்ட் செய்யாமல் சிவகார்த்திகேயன் நியாயத்தின் பக்கம் நின்றார். அதனைத்தான் இமான் துரோகம் என்று சொல்கிறார். இதனை வெளியில் தவறாக புரிந்துகொள்கிறார்கள்.

இதனையடுத்து இமான் கொடுத்த பேட்டியின் அடுத்த பாகத்தில் சிவகார்த்திகேயன் மட்டும் காரணமில்லை. சிவகார்த்திகேயனும் ஒரு காரணம் என தெரிவித்திருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்கள் இமான் என்னதான் சொல்ல வராரு என கேள்வி கேட்டு அவசரப்பட்டு சிவகார்த்திகேயனை தவறாக எடுத்துவிட்டோமோ என்று கூறினர்.

- Advertisement -

இருந்தாலும் இந்த விவகாரம் குறித்து சிவகார்த்திகேயன் வாய் திறக்க வேண்டும் என தெரிவிக்கவும் செய்தனர். சூழல் இப்படி கடந்த சில நாட்களாக பூதாகரமான இவ்விஷய நேற்று முன் தினத்திலிருந்து கொஞ்சம் ஓய ஆரம்பித்தது. அதற்கு காரணம் லியோ ரிலீஸ். விஜய் நடித்திருக்கும் லியோ படம் ரிலிஸாகியிருபதால் ரசிகர்களின் கவனம் தற்போது அதனை நோக்கி திரும்பியிருக்கிறது.

இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் இந்த விஷயத்தை மீண்டும் கிளப்பிவிட்டிருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், வடிவேலு பெருமூச்சு விடும் புகைப்படத்தை பகிர்ந்து அப்பாடா லியோ கலவரத்துல நம்மள மறந்துட்டாங்க என்று சிவகார்த்திகேயன் கூறுவது போல் ட்வீட் செய்திருக்கிறார். அவரது இந்த ட்வீட் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

- Advertisement -

சற்று முன்