- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி திரைப்படத்திற்காக தீயாய் வேலை செய்யும் அனிருத்... ரசிகர்களை மகிழ்ச்சியில் நனைக்க விரைவில் வரப் போகிறது...

விடாமுயற்சி திரைப்படத்திற்காக தீயாய் வேலை செய்யும் அனிருத்… ரசிகர்களை மகிழ்ச்சியில் நனைக்க விரைவில் வரப் போகிறது ஓர் அறிவிப்பு…

- Advertisement -

விடாமுயற்சி திரைப்படத்திற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு மே ஒன்றாம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. அதன்பிறகு அதன் சூட்டிங்கை எடுத்துக் கொள்ள கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆனது. அக்டோபர் மாதம் படக்குழுவினர் அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றனர். இதனைத் தொடர்ந்து முழு வீச்சில் படத்திற்கான பணிகளில் ஈடுபட்டார் இயக்குனர் மகிழ்திருமேனி.

 

இதில் அஜித்தின் மனைவியாக திரிஷா நடித்திருக்கிறார். அர்ஜுன் ஆரவ் ரெஜினா உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இதற்கு இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது.

 

இதனிடையே விறுவிறுப்பாக நடைபெற்ற படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது. அதற்கான காரணமும் சரியாக கூறப்படவில்லை. இந்த இடைவேளையில் தனது அடுத்த படத்திற்கான வேலையில் இறங்கினார் அஜித்குமார். அதன்படி அவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கைகோர்த்து குட் பேட் அக்லி திரைப்படத்தில் பணிபுரிய ஆரம்பித்தார்.

 

இதன் படப்பிடிப்பும் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. இதிலும் த்ரிஷாவே கதாநாயகியாக நடிக்க அஜித்தின் போர்ஷன்கள் முடிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் நடுவே விடாமுயற்சி திரைப்படத்திற்கான பணிகள் மீண்டும் சூடு பிடித்தன. ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அண்மையில் இந்த திரைப்படத்திலிருந்து டீசர் வெளியானது.

 

அதில் எடுக்கப்பட்ட காட்சி அமைப்புகளும், அனிருத்தின் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஹாலிவுட் தரத்தில் படம் இருப்பதாக பலரும் பேசினார்கள். டீசரில் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கான பணிகளிலும் மகிழ் திருமேனி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கடைசி நேரத்தில் அவர் சில காட்சிகளை மீண்டும் படமாக எடுக்கவும் திட்டமிட்டு உள்ளார்.

 

இதற்காக மொத்தம் 13 நாட்கள் சூட்டிங் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது அது நான்கு நாட்களாக குறைந்து இருக்கிறது. இதில் அஜித் திரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனிடையே படத்தின் ஓபனிங் பாடல் விரைவில் வெளியாகிறது. அனிருத் இந்த பாடலை, மசாலா தரத்தில் எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு பக்கம் இருக்க, அனிருத் மற்றும் அஜித் குமார் இணைந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சற்று முன்