நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவகியிருக்கிறது ஜெயிலர் திரைப்படம். சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், வசந்த் ரவி, ரய்மாய் கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புடன் படமானது இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் படம் வெளியானது. இதன் காரணமாக ரசிகர்கள் ஆவலுடம் திரையரங்குகளுக்கு படையெடுத்தனர். தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிகள் இல்லை.அதேசமயம் வெளி மாநிலத்திலும், வெளிநாடுகளிலும் அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டன. தமிழ்நாட்டில் 9 மணி காட்சிதான் முதல் காட்சியாக திரையிடப்பட்டது.
9 மணிக்குத்தான் பட ரிலீஸ் என்றாலும் அதற்கு முன்னதாகவே திரையரங்குகளுக்கு ரசிகர்கள் சென்று பட்டாசு வெடித்தும், கட் அவுட் பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்து திருவிழா போல் கொண்டாடினர். இரண்டு வருடங்கள் கழித்து தலைவர் தரிசனத்தை பார்க்கப்போகிறோம் என கூறி நடனம் ஆடவும் செய்தனர்.
படத்தை பார்த்த ரசிகர்கள் படம் சூப்பராக இருக்கிறது என்றும்; ரஜினிகாந்த்துக்கு தரமான கம்பேக் கொடுத்து நெல்சன் திலீப்குமார் தன்னையும் நிரூபித்திருக்கிறார். அவரது டார்க் காமெடி காட்சிகளும், யோகிபாபு – ரஜினிகாந்த் காம்போ பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகியிருப்பதாகவும்; இரண்டாம் பாதியில் ரஜினியை ரெட்ரோ லுக்கில் பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது என்றும் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
நெல்சன் நம்ம பக்கம். மகிழ்ச்சி. மகிழ்ச்சி.
— Blue Sattai Maran (@tamiltalkies) August 10, 2023
அதேசமயம் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றனர். முதல் பாதி பயங்கர ஸ்லோவாக இருக்கிறது எனவும்; தெலுங்கு பட வாடை அடிக்கிறது என்றும் கூறுகின்றனர்.ஆனால் இதனையெல்லாம் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தை மனதில் வைத்துக்கொண்டு விஜய் ரசிகர்கள் வேண்டுமென்றே கிளப்பிவிடுகிறார்கள் என ரஜினி ரசிகர்கள் கூறுகின்றனர்.
கைய குடுங்க சகல.. pic.twitter.com/hsuV4XfrlB
— Blue Sattai Maran (@tamiltalkies) August 10, 2023
இந்நிலையில் ரஜினியையும், ஜெயிலரையும் சமீபமாக பங்கமாக கலாய்த்துவரும் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நெல்சன் நம்ம பக்கம். மகிழ்ச்சி. மகிழ்ச்சி” என குறிப்பிட்டிருக்கிறார்.அதேபோல் வடிவேலுவின் கைய கொடு சகல வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்களில் ஒரு தரப்பினர் இவர் கலாய்க்கிறாரா இல்லை புகழ்கிறாரா என குழப்பமா இருக்கே எனவும்; மற்றொரு தரப்பினர் இதில் என்ன சந்தேகம் கலாய்க்கத்தான் செய்கிறார் என்று மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர்.





