- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத் குமார் வீட்டு வாசலில் திருமண பத்திரிகை வைத்துச் சென்ற பெங்களூரு ரசிகர் - வைரலமாகும்...

அஜீத் குமார் வீட்டு வாசலில் திருமண பத்திரிகை வைத்துச் சென்ற பெங்களூரு ரசிகர் – வைரலமாகும் தரமான சம்பவம்

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் இப்போது டாப் ஸ்டார் நடிகர்கள் 4 பேரில் ஒருவராக உச்சத்தில் இருக்கிறார். ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார் ஆகிய அந்த 4 பேரும்தான் இன்று தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் வரிசையில் காத்திருந்து தேதி வாங்கும் அளவுக்கு பெரிய ஸ்டார்களாக இருக்கின்றனர். ஏனென்றால் இப்போதைக்கு பணமழை கொட்டுவது இவர்களது படங்களுக்கு தான்.

நடிகர் அஜீத்குமார் அமராவதி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். ஆசை படம் மூலம் அவரை ரசிகர்களை அறிமுகப்படுத்தினார் இயக்குநர் வசந்த். அடுத்து காதல் கோட்டை படம் மூலம் மிக பிரபலமான நடிகராக மாறியவர் அஜீத்குமார். பிறகு தொடர்ந்து நடித்து முன்னணி நடிகரானார்.

- Advertisement -

இப்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்துவரும் அஜீத்குமார், கடந்த பல ஆண்டுகளாக பத்திரிகையாளர்களை சந்திப்பது இல்லை. சினிமா விழாக்கள், விருது விழாக்கள், அவர் நடித்த படங்களின் பிரமோ நிகழ்ச்சிகள் என எதிலுமே கலந்துக்கொள்வதில்லை. இதை பாலிஸியாக வைத்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல, யாருடைய மறைவுக்கும் நேரில் செல்வதில்லை என்ற ஒரு கொள்கையும் வைத்திருக்கிறார். சினிமாவில் மூத்த நடிகர், தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு, சென்னையில் இருந்தும் அஜீத்குமார் செல்லவில்லை. இதனால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

- Advertisement -

மேலும், நள்ளிரவு 3 மணிக்கு அஞ்சலி செலுத்த வீட்டுக்கு வருகிறேன்.ஏனென்றால் அந்த நேரத்தில்தான் ரசிகர்கள் தொந்தரவு இருக்காது. ரசிகர்கள் கூட்டம் என்றாலே அலர்ஜி என்றும் புது வியாக்கியானம் பேசியிருக்கிறார் அஜீத்குமார். இவரது இந்த செயல் அவரது ரசிகர்களையே முகம் சுளிக்க வைத்தது.

இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த ரசிகர் ஒருவர், தனது திருமண அழைப்பிதழ் தருவதற்காக அஜீத்குமார் வீட்டுக்கு வந்திருக்கிறார். அங்குள்ள செக்யூரிட்டி அவரை கேட்டை தாண்டி விடவே இல்லை. போ போ என விரட்டி உள்ளனர். நொந்துபோன அந்த ரசிகர், அஜீத் வீட்டு கேட் வாசலில் தனது திருமண அழைப்பிதழை வைத்துவிட்டு, இப்படிபட்ட ஒரு நடிருக்கு நான் ரசிகராக இருந்ததற்கு வெட்கப்படுகிறேன் என, அழாத குறையாக சென்றுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்