ஜப்பான் என்ற மாபெரும் தோல்வி படத்தை கொடுத்த நடிகர் கார்த்தி நடிப்பில் நேற்று வெளியான படம் மெய்யழகன். இந்த படத்தை 96 என்ற ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் பிரேம்குமார் இயக்கி உள்ளார். இவர் விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் மீண்டும் 96 படம் 2ம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு வருகிறார். அவர்களது கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறார்.
நடிகர் சூர்யா, ஜோதிகாவின் 2டி தயாரிப்பு நிறுவனம், மெய்யழகன் படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் அரவிந்த் சாமி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.
மெய்யழகன் படம் இசை வெளியீட்டு விழா கோவையில் நடந்தது. இந்த விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, எனது சொந்த ஊர் கோயம்புத்தூர்தான். அதனால்தான் உறவுகளின் உணர்வுகளை பற்றி பேசுகிற இந்த படத்தின் விழாவை கோவையில் நடத்துகிறோம் என்று குறிப்பிட்டு பேசினார்.
மெய்யழகன் படம் நேற்று வெளியான நிலையில், இந்த படம் குறித்து பாசிடிவ் விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகின்றன. எனினும் சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன், இந்த படம் குறித்து வழக்கமான தனது ஸ்டைலில் இந்த படம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
கார்த்தி யாரென்றே தெரியாமல் அரவிந்த் சாமி அவருடன் பழகுவார். அவர் பெயர் என்ன என்று தெரிந்துக்கொள்ள அவர் முயற்சிக்கும்போது நமக்கும் ஒரு ஆர்வம் வந்துவிடும். ஆனால் படத்தின் 2ம் பாதியில் கார்த்தி, என் அண்ணன் பெயர் மதியழகன் என குறிப்பு கொடுப்பார். அப்போது அவரது பெயரை கண்டுபிடிக்க முடியாமல் அரவிந்த் சாமி திணறுவது பெரிய லாஜிக் ஓட்டையாக உள்ளது.
லியோ படம் பார்ப்பவர்களுக்கு விஜய் பெயர் லியோ என்று தெளிவாக தெரியும். இதுதவிர அனிருத் ஒருபுறம் லியோ லியோ என்று கத்திக் கொண்டே இருப்பார். அதையும் தாண்டி படத்தில் வில்லன் கோஷ்டி, நீதானே லியோ என்று கேட்டு படம் பார்ப்பவர்களை கடுப்பேற்ற வைக்கும். இரண்டு குடிகாரர்கள் பேசுவதை, குடிக்காதவன் அருகில் இருந்து கேட்பது போல கொடுமையான விஷயம் உலகில் எதுவும் இல்லை. படத்தின் 2ம் பாதி சொதப்பி விட்டது. படம் சூர மொக்கையாக உள்ளது, என மெய்யழகன் படத்தை விமர்சித்துள்ளார்.





