- Advertisement -
Homeபொழுதுபோக்குபலரும் பாராட்டும் ஆடுஜீவிதம் படத்தை, ஒரே வார்த்தையில் போட்டுத் தாக்கிய ப்ளு சட்டை மாறன் -...

பலரும் பாராட்டும் ஆடுஜீவிதம் படத்தை, ஒரே வார்த்தையில் போட்டுத் தாக்கிய ப்ளு சட்டை மாறன் – கடைசியில் அந்த விஷயத்தில் டைரக்டர் சிக்கிட்டாரே?

- Advertisement -

சமீபத்தில் வெளியான மலையாள படங்களுக்கு, தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் துவங்கி இதுவரை 3 மாதங்களான நிலையில் இதுவரை ஒரு தமிழ் படம் கூட பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதற்கும் 60க்கும் மேற்பட்ட புதிய படங்கள் வந்துவிட்டன. அதிலும் தனுஷ், சிவகார்த்திகேயன், ரஜினி போன்ற பெரிய நடிகர்களின் படங்களும் இருந்துள்ளன.

விஜய் நடித்து வரும் கோட், சூர்யா நடித்துள்ள கங்குவா, அஜீத்குமார் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி, சூரி நடித்துள்ள விடுதலை 2, கருடன், அருண் விஜய் நடிப்பில் டைரக்டர் பாலாவின் வணங்கான், ரஜினிகாந்த் நடித்துவரும் வேட்டையன், கமல் நடித்து வரும் இந்தியன் 2 போன்ற படங்கள் வந்தால்தான் இந்த நிலை மாறும் என்பது, தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

- Advertisement -

ஆனால் இந்த 3 மாத இடைவெளியில் வெளிவந்த மலையாள சினிமா படங்கள் சில, பெரிய அளவில் வெற்றிப் பெற்றுள்ளன. குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் அந்த படங்கள் மிகப்பெரிய தாக்கத்தை தந்துவிட்டன. குறிப்பாக சிதம்பரம் இயக்கிய மஞ்சும்மெல் பாய்ஸ் படம், 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது. இந்த படம் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.

அதேபோல், மம்முட்டி நடித்த பிரமயுகம் என்ற படமும், பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள கேரக்டர்கள் மொத்தம் 3 பேர்தான். அதுவும் ஆண்கள்தான். ஒரு வனாந்தர காட்டுக்குள் பாழடைந்த அரண்மனை வீட்டுக்குள் நடப்பதுதான் படத்தின் கதை. காட்சிக்கு காட்சிக்கு விறுவிறுப்பும், சஸ்பென்ஸ்சும் நிறைந்த இந்த படத்தில் மம்முட்டி உள்பட 3 பேர் நடிப்புமே வேற லெவலில் இருக்கிறது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

- Advertisement -

இப்போது பிருத்விராஜ் நடிப்பில் ஆடுஜீவிதம் என்ற படம் நேற்று வெளியானது. முதல் நாளிலேயே 15 கோடி ரூபாய் வசூலித்த இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால் வழக்கம் போல சினிமா விமர்சகர் ப்ளு்சட்டை மாறன் இந்த படத்தை தனது பாணியில் விளாசி தள்ளியுள்ளார். அட இந்த படத்தையும் அவர் விட்டு வைக்கலையா என ரசிகர்கள் புலம்புகின்றனர்.

ப்ளு சட்டை மாறன் தனது பதிவில், நான் லீனியராக இல்லாமல், லீனியர் படமாக எடுத்திருந்தால், படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும். துவக்கத்தில் ஹீரோ படும் கஷ்டங்களை காட்டிவிட்டு, பிளாஷ்பேக்கில் அவர் நன்றாக வாழ்ந்ததை காட்டுகின்றனர். இதனால் அவரது கஷ்டங்கள், ரசிகர்களுக்கு சரியாக ரீச் ஆகவில்லை. தாவரங்களோ, தண்ணீரோ இல்லாத பாலைவனமாக இருக்கும் இடத்தில் ஆடுகளை பிருத்விராஜ் வாக்கிங் அழைத்து செல்கிறாரா என்றும் கேள்வி கேட்டு கலாய்த்திருக்கிறார். ஆனால் பிருத்விராஜ் நடிப்புக்கு ஆஸ்கர் அவார்டு கொடுக்கலாம் என்றும் அவர் பாராட்டியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்