- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயம் ரவி ஓட்டுற ஆம்புலன்ஸ்ல, இதைத்தான் முதல்ல கொண்டு போகணும் போல இருக்கு - ...

ஜெயம் ரவி ஓட்டுற ஆம்புலன்ஸ்ல, இதைத்தான் முதல்ல கொண்டு போகணும் போல இருக்கு – சைரன் படம் குறித்து போட்டு தாக்கிய ப்ளு சட்டை மாறன்

- Advertisement -

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், சில தினங்களுக்கு முன் வெளியான படம் சைரன். ஆண்டனி பாக்யராஜ் டைரக்ட் செய்துள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன். சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தொடர்ந்து அகிலன், இறைவன் தோல்வி படங்களை தந்த ஜெயம் ரவி, இந்த படத்தின் வெற்றியை ஆவலாக எதிர்பார்த்துள்ளார்.

ஆனால் படம் வெளியான பிறகு, பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு இல்லை. வழக்கம்போல இந்த படமும் ஜெயம் ரவிக்கு ஊத்திக்கொண்டு விட்டதாகவே நெட்டிசன்கள், வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். அதுவும் கீர்த்தி சுரேஷ் நடிப்பு இந்த படத்தில் ஓவர் அலட்டலாக தெரிவதாகவும் ரசிகர்களிடையே நெகட்டிவ் விமர்சனம் எழுந்து வருகிறது.

- Advertisement -

சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன், சைரன் படத்தை வழக்கமான தனது பாணியில் கலாய்த்து தள்ளியிருக்கிறார். அவர் கூறுகையில், இந்திய சினிமாவில் சைரன் படம் போன்ற கதைகள், இதுவரை லட்சக்கணக்கில் வந்திருக்கின்றன. இதெல்லாம் ஏற்கனவே ரசிகர்கள் பலமுறை பார்த்து நொந்த கதை தான். வழக்கமான பழிவாங்கும் கதை என்றால் புதிதாக எந்த சுவாரசியமும் இல்லை.

செய்யாத தப்புக்கு ஜெயிலுக்கு போகும் ஜெயம் ரவி, தன் மகளை பார்க்க ஜெயிலில் இருந்து பரோலில் திரும்பி வருகிறார். அப்போது மகளை பார்க்காமல், கொலை செய்ய போய் விடுகிறார். ஹீரோயின் இறந்ததை முதலிலேயே சொல்லி விடுவதால், அதிலும் பெரிய திருப்பம் இல்லை. அதன்பின் வரும் பிளாஷ்பேக்கில் காதல், திருமணம், மனைவி இறத்தல் போன்ற வழக்கமான கதைதான்.

- Advertisement -

இதுபோன்ற உப்புமா கதைகளை எத்தனை முறை எடுத்தாலும் தோல்வி அடைந்தாலும், மீண்டும் மீண்டும் அதையே எடுத்து ரசிகர்களை நோகடிக்கின்றனர். பேசாமல் சீரியல் எடுக்கப் போனால், அதுதான் சரியான போட்டியாக இவர்களுக்கு இருக்கும். எந்தவிதமான லாஜிக்கும் இல்லாத உப்புமா கதைகளை படமாக்குவதில் இயக்குநர்கள் சலிப்பதே இல்லை.

சைரன் படத்தை பயங்கரமாக சொதப்பி வைத்திருக்கின்றனர். மலையாளம், தெலுங்கு படங்கள் கூட பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். தமிழில் இதுபோன்ற உப்புமா படங்களை பார்க்க முடிகிறது. இந்த படத்தில் ஆம்புலன்ஸ் டிரைவாக ஜெயம் ரவி வருகிறார். ஆனால் உண்மையில் சைரன் படத்தை தான் முதலில் ஆம்புலன்ஸ்சில் கொண்டு செல்ல வேண்டும் போல இருக்கிறது என, சைரன் படத்தை வெச்சு செய்துள்ளார் ப்ளு சட்டை மாறன்.

- Advertisement -

சற்று முன்