- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் நடிச்ச படத்தை பார்க்கப் போனா நீங்க தான் ஆடு, 3 மணி நேரம் உசுர...

விஜய் நடிச்ச படத்தை பார்க்கப் போனா நீங்க தான் ஆடு, 3 மணி நேரம் உசுர வாங்கிட்டாங்க – தி கோட் படம் குறித்து விளாசிய பிரபலம்!

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நேற்று வெளியான படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இந்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், ஒரு தரப்பினர் இது விஜயகாந்த் நடித்த ராஜதுரை படத்தின் அக்மார்க் காப்பி என்று கூறி வருகின்றனர். விஜய் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய படத்தையே வெங்கட்பிரபு உல்டாவாக்கி தி கோட் எடுத்துள்ளார் என்று கூறி வருகின்றனர்.

தி கோட் படம் குறித்து பிரபல சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் கூறியிருப்பதாவது, படத்தில் ஹீரோ ஆன்டி டெரரிஸ்ட் ஸ்க்வாட்ல இருக்கிறார். அவரால் வில்லன் குடும்பம் பாதிக்கப்படுகிறது. இதற்கு பழிவாங்க ஹீரோ மகனை வில்லன் கடத்தி வளர்க்கிறார். அவர் பெரியவனாக வளர்ந்த பிறகு ஹீரோவுக்கு எதிராக, அப்பாவை பழிவாங்க மகனை அனுப்புகிறார் என்பதுதான் கதை.

ஆனால் நாம் யூகிக்கிறதை விட படம் கேவலமாக தான் இருக்கிறது. ஒரு படம் எப்படின்னு பார்க்க முழுபடம் பார்க்க தேவையில்லை. முதல் சீன் பார்த்தாலே தெரிந்து விடும். கென்யாவுல நடக்கிற முதல் சண்டை காட்சியே பார்த்தாலே, இனி 3 மணி நேரம் இங்கே உட்கார்ந்து இருக்க வேண்டுமா என்ற பீதி நமக்கு வந்துவிடும்.

இந்த படம் பார்க்கிற போது, துப்பாக்கி எவ்வளவு நல்ல படம் என்று ரசிகர்களுக்கு தோன்றும். ஒரு படத்தில் வில்லன் ரோல் நின்றால்தான் படம் எடுபடும். ஆனால் இந்த படத்தில் வில்லன் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. சும்மா சும்மா வந்து அப்பப்போ நின்றுகிட்டு இருக்கிறார். அப்புறம் வேற ஒரு வில்லன் வருகிறார். அப்புறம் படம் இன்னும் மோசமா போகுது.

இந்த படத்தில் ஒரு விஜய் அடிக்கிறார், ஒரு விஜய் அடி வாங்குகிறார். இதில் யாருக்கு ஆதரவாக கைதட்டறதுன்னு ரசிகர்களே குழம்பி போய் உட்கார்ந்திருக்கின்றனர். இதில் வில்லன் மோகன், வில்லன் விஜயை தாண்டி இன்னொரு ஒரிஜினல் வில்லன் யுவன் சங்கர் ராஜா இருக்கிறார். கிளைமாக்ஸ் பைட்டில் பிஜிஎம் இசையை போடாமல், கமெண்ட்ரியை போட்டு ஒப்பேத்தி இருக்கிறார். ஏதாவது ஒண்ணை செய்து படத்தை ஒப்பேத்தி இருக்கின்றனர்.

இதில் டீஏஜிங் டெக்னாலஜி டைரக்டருக்கு கைகொடுத்து உதவி இருக்கிறது. ஆனால் இரண்டு விஜய் இருந்தாலும் ஆள் மாறாட்டம் கிடையாது. அப்புறம் எதுக்கு டீ ஏஜிங் பண்ணியிருக்காங்க என்ற பெரிய குழப்பமும் இருக்கிறது. இந்த படத்தை இரண்டே கால் மணி நேரத்திலேயே எடுத்திருக்கலாம். 3 மணி நேரம் எடுத்து உயிரை வாங்கி விட்டார்கள். இந்த படத்தை போய் நீங்கள் பார்ப்பதாக இருந்தால் நீங்கதான் ஆடு என்று தி கோட் படத்தை ப்ளு சட்டை மாறன் விமர்சித்திருக்கிறார்.

சற்று முன்