- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்க போதைக்கு நாங்க ஊறுகாயா? ரஜினி 171 பிரமோ சூட்டிங்கில் கலந்து கொள்ளாத பாலிவுட் ஹீரோக்கள்...

உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா? ரஜினி 171 பிரமோ சூட்டிங்கில் கலந்து கொள்ளாத பாலிவுட் ஹீரோக்கள் – பின்னணியில் இப்படி ஒரு காரணமா?

- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ரஜினி 171 படத்தின் ப்ரோமோ சூட்டிங், சன் பிக்சர்ஸ் சார்பில் சன் ஸ்டுடியோவில் நடக்கிறது. இதற்காக ஷெட் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மேற்பார்வையில் சூட்டிங் நடப்பதற்கான பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.

ரஜினிகாந்த், விஜய், அஜீத்குமார் போன்ற மாஸ் ஹீரோக்களின் படங்களில் நடிப்பவர்களுக்கு, அவர்கள் மற்ற மொழி படங்களில் பெரிய ஸ்டார் நடிகர்களாக இருந்தாலும், தமிழ் சினிமாவை பொருத்தவரை ரஜினி, விஜய், அஜீத் குமார் போன்ற கதாநாயகன்களுக்கு தான் மாஸ். அவர்களுக்கு மட்டுமே பெரிய அளவில் முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. இதனால் மற்ற மொழி நடிகர்கள் தமிழில் நடிப்பதற்கு யோசித்து தான் நடிக்க வேண்டி இருக்கிறது.

அந்த வகையில் ரஜினிகாந்த் நடிக்கும் ரஜினி 171 படம் சூட்டிங் வரும் மே 1ம் தேதியன்று தொழிலாளர் தினத்தில் தொடங்குகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த்துக்கு ஹீரோயினாக தளபதி, சிவா படங்களில் ஏற்கனவே அவருடன் நடித்த ஷோபனா நடிப்பார் என்று தகவல் பரவி வருகிறது. ஆனால் இன்னும் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே இந்த படத்தில் நடிப்பதற்காக ஷாருக்கான், ரன்வீந்தர் சிங் போன்ற பாலிவுட் நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் இந்த படத்தின் பிரமோ சூட்டிங்கில் கலந்து கொள்வார்கள் என்றும் முதலில் தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில் ரஜினி 171 படத்தின் பிரமோ சூட்டிங்கில் அவர்கள் இருவருமே பங்கேற்கவில்லை என்பது, ரசிகர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் கேமியோ ரோலில் நடிக்க ஷாருக்கானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அவர் மறுத்தாலும் தொடர்ந்து அவரிடம் லோகேஷ் கனகராஜ் தரப்பிலிருந்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அதனால் இந்த படத்தில் இரண்டு பாலிவுட் நடிகர்களுமே நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

எனினும் ரஜினிக்கு தான் அதிக மாஸ் என்பதால் அவருக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தரக்கூடிய வகையில் இந்த படம் இருக்கும். இந்த படத்தில் தங்களது கேரக்டர் டம்மியாக இருக்கலாம் என்பதால், பாலிவுட் நடிகர்கள் இருவருமே ரஜினியுடன் நடிப்பது குறித்து யோசித்து வருகின்றனர். ஏனெனில் தங்களது பாலிவுட் ஸ்டார் தகுதிகளை அவர் இழக்க தயாராக இல்லை. அதனால் இந்த படத்தில் அவர்கள் நடிப்பார்களா இல்லையா என்பது பெருத்த சந்தேகத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது

சற்று முன்