- Advertisement -
Homeபொழுதுபோக்குகாருக்குள்ளயே அப்படி பண்ண சொன்னாங்க- ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை காயத்ரிக்கு நடந்த கொடுமை, ஒரு பொண்ணுன்னு...

காருக்குள்ளயே அப்படி பண்ண சொன்னாங்க- ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை காயத்ரிக்கு நடந்த கொடுமை, ஒரு பொண்ணுன்னு கூட பாக்காம இப்படியா?

- Advertisement -

“நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும்” என்ற திரைப்படத்தின் மூலம் மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் காயத்ரி ஷங்கர். அதனை தொடர்ந்து “ரம்மி”, “புரியாத புதிர்” போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். குறிப்பாக விஜய் சேதுபதியுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு வெளிவந்த “விக்ரம்” திரைப்படத்தில் கூட பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். காயத்ரி தமிழ் மட்டுமல்லாது மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.

சினிமா துறையில் இருக்கும் பெண்களுக்கு என்றைக்கும் பிரச்சனைகள் இல்லாமல் இருந்ததில்லை. அட்ஜெஸ்ட்மென்ட் என்ற விஷயம் மிகவும் சாதாரணமாக ஆகிப்போன நிலையில் சினிமாவில் நடிக்க வரும் புது முக பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, படப்பிடிப்பு தளத்தில் பெண்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் குறித்தும் நாம் கணக்கில் கொள்ள வேண்டியது இருக்கிறது. அந்த வகையில் படப்பிடிப்பு தளத்தில் தனக்கு ஏற்பட்ட அசௌகரியங்களைத்தான் தனது பேட்டி ஒன்றில் நடிகை காயத்ரி பகிர்ந்துகொண்டுள்ளார்.

“படப்பிடிப்பு தளத்தில் ஒரே ஒரு பெண்தான் இருக்கிறார், மற்றவர்கள் எல்லாம் ஆண்கள் என்றால் ஒரு பாத்ரூம் கூட அரேஞ்ச் பண்ணி தர மாட்டாங்க. பெண்களுக்கான பிரைவசிக்கு படப்பிடிப்பு தளத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.  அதே போல் படப்பிடிப்பிற்காக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு போகும்போது பாதி வழியிலேயே சில லோகேஷன்கள் இயக்குனருக்கு பிடித்துப்போகும்.

அப்படியே காரை நிறுத்திவிட்டு இந்த இடத்தில் ஒரு காட்சியை படமாக்கிவிடலாம் என்று காருக்குள்ளேயே உடையை மாற்றிக்கொள்ளச் சொல்வார்கள். நடிகைகளுக்கு குறைந்தபட்சம் ஒரு சின்ன அறையாவது இருந்தால்தானே உடை மாற்றிக்கொள்ள முடியும். இதை கூட பல சினிமா நிறுவனங்கள் புரிந்துக்கொள்வது இல்லை” என்று மிகவும் கவலையோடு அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார் காயத்ரி.

சற்று முன்