- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவின் உண்மையான சூப்பர் ஸ்டார் இவர்தான், ரஜினியோ விஜயோ அல்ல - போட்டுத் தாக்கிய...

தமிழ் சினிமாவின் உண்மையான சூப்பர் ஸ்டார் இவர்தான், ரஜினியோ விஜயோ அல்ல – போட்டுத் தாக்கிய நடிகர் போஸ் வெங்கட்

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகச் சிறப்பான நடிப்பை தரும் நடிகர்களின் முக்கியமான ஒரு நடிகர் போஸ் வெங்கட். சின்னத்திரை இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் மெட்டிஒலி சீரியலில் நடித்து பிரபலமானவர். பின் சிவாஜி, கவன், தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமா குறித்தும், அதன் இன்றைய போக்கு குறித்தும் அவ்வப்போது தனது கருத்துகளை பொதுவெளிகளில் சொல்லிக் கொண்டிருப்பவர் போஸ் வெங்கட். இவரது மனைவி சோனியாவும் ஒரு சினிமா நடிகைதான். தலைநகரம் படத்தில் இருவரும் கணவன், மனைவியாக நடித்திருந்தனர்.

சமீபத்திய ஒரு நேர்காணலில் நடிகர் போஸ்வெங்கட் கூறியதாவது, ரஜினி, அஜீத், விஜய் போன்ற பெரிய நடிகர்கள் நினைத்தால், இவர்களால் நிறைய படங்களை தயாரிக்க முடியும். ஆண்டுக்கு 3 படங்களை இவர்கள், புரடியூஸ் பண்ண முடியும். ஒரு படத்துக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் இவர்களால் தாராளமாக இதைச் செய்ய முடியும். ஆனால், செய்வதில்லை.

நல்ல கதைகள், நல்ல படங்களை இவர்கள் தயாரிக்கலாம். இதனால், நிறைய உதவி இயக்குநர்கள் இயக்குநர்களாக மாறுவார்கள். ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆனால் இவர்களுக்கு சினிமா சார்ந்தவர்கள் மீது எல்லாம் அக்கறையே இல்லை என்பதுதான் உண்மை. தன்னை வாழ வைத்த சினிமாவுக்கு, ரசிகர்களுக்கு கைமாறு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எதுவுமே இல்லை. இவர்கள் தயாரித்து வழங்கும் படங்கள் என்றால், இவர்களது ரசிகர்கள் படம் பார்ப்பார்கள். இயக்குநர்களும் வாழ்வார்கள். சிறிய நடிகர்களும் முன்னேற்றம் அடைவர்.

ஆனால், விஜய் போன்றவர்கள் அரசியலுக்கு வந்து என்ன சாதிக்க போகிறார்கள்? தான் சார்ந்துள்ள சினிமா துறைக்கே விஜய் எதுவும் செய்யவில்லை. அந்த சினிமாவை வாழ வைக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை. ஆனால், விஜய் சேதுபதி அதை செய்கிறார். கடைசி விவசாயி, மேற்குத்தொடர்ச்சி மலை, ஆரஞ்சு மிட்டாய் போன்ற சின்ன முதலீடு படங்களை தயாரிக்கிறார். அதில் கெஸ்ட் ரோலிலும் நடிக்கிறார். அந்த படங்கள் பேசப்படுகின்றன. தமிழ் படங்களாக டெல்லி வரை சென்றடைகின்றன.

கலசாரத்தை சொல்கிற, தமிழ் சினிமாவை காப்பாற்றுகிற, தமிழுக்காக போராடுகிற படங்களை தயாரிக்கிற விஜய் சேதுபதிதான் தமிழ் சினிமாவின் உண்மையான சூப்பர் ஸ்டார். ரஜினியோ, விஜயோ அல்ல. 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிற விஜய் சேதுபதி, நல்ல படங்களை, சின்ன பட்ஜெட் படங்களை தயாரித்து வழங்கும்போது நூறுகோடிகளில் சம்பளம் வாங்குகிற ரஜினி, விஜயால் அதை செய்ய முடியாதா, தமிழ் சினிமா மீது அவ்வளவுதான் அவர்கள் அக்கறை என்பது இதன்மூலம் தெளிவாகிறது, என்று கூறி இருக்கிறார் நடிகர் போஸ்வெங்கட்.

சற்று முன்