- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர்கள் ஆர்யா சந்தானம் கூட்டணியில் ரசிகர்களின் மனங்களை வென்ற சூப்பர் ஹிட் படம், 15...

நடிகர்கள் ஆர்யா சந்தானம் கூட்டணியில் ரசிகர்களின் மனங்களை வென்ற சூப்பர் ஹிட் படம், 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திரையில் – ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு வந்தாச்சு!

- Advertisement -

பல ஆண்டுகளுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட் படங்கள் மீண்டும் தியேட்டர்களுக்கு வரும்போது அந்த படங்களை மீண்டும் தியேட்டர் எபெக்ட்டில் காண ரசிகர்கள் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். அதே நேரத்தில் அந்த படம் வெளியான காலகட்டத்தில் சிறுவர்களாகவும் டீன் ஏஜ் வயதிலும் இருந்தவர்கள் இப்போது அந்த படங்களை மீண்டும் பார்ப்பது புதிய அனுபவத்தை தருகிறது.

அந்த வகையில் விஜய் திரிஷா நடித்த கில்லி படம் கடந்தாண்டில் வெளியான போது 2கே கிட்ஸ் ரசிகர்கள் அந்த படத்தை தியேட்டர்களில் கொண்டாடினார்கள். அந்த படத்தில் ஒவ்வொரு பாடல் காட்சியிலும் தியேட்டர்களில் குத்தாட்டம் போட்டு தங்களது சந்தோஷத்தை உற்சாகத்தை வெளிப்படுத்தினர். 20 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான கில்லி படம் ரூ. 22 கோடிக்கு மேல் ரி ரிலீஸ்சில் வசூலில் அள்ளியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்போது நடிகர் விஜய் ஜெனிலியா நடித்த சச்சின் படம் விரைவில் ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதே போல் நடிகர் ஜெயம் ரவி அசின் நதியா பிரகாஷ் ராஜ் நடிப்பில் பல ஆண்டுகளுக்கு முன் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சி படம் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. அதே போல் சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் நடித்த ரஜினி முருகன் படமும் ரி ரிலீஸ் ஆக உள்ளது.

பாட்ஷா நாயகன் ஆளவந்தான் முத்து போக்கிரி என பல ஆண்டுகளுக்கு முன் வெளியான படங்கள் ரி ரிலீஸ் செய்யப்படும் நேரங்களில் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம் சவுண்ட் எபெக்ட் என படங்களை புது மெருகேற்றிய நிலையில் மீண்டும் திரையில் பார்க்கும் போது அந்த படங்களை மீண்டும் ரசிகர்களால் விரும்பி ரசிக்க முடிகிறது. சேரன் இயக்கத்தில் சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்ற ஆட்டோகிராப் வருகிற மே மாதம் ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடியில் ஒரு காலகட்டத்தில் கலக்கியவர் நடிகர் சந்தானம். பல படங்களில் இரட்டை நாயகர்களில் ஒருவராகவே அவர் படம் முழுவதும் ஹீரோவுடன் இருந்து படத்தை வெற்றி பெறச் செய்தார். அந்த வகையில் உதயநிதி ஜீவா ஆர்யா சிம்பு விஷால் போன்றவர்களின் படங்களில் அதிக முக்கியத்துவத்தை சந்தானம் பெற்றிருந்தார்.

கடந்த 2010ம் ஆண்டில் இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம், ஆர்யா நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பாஸ் என்கிற பாஸ்கரன். இந்த படத்தில் நயன்தாரா விஜயலட்சுமி மொட்டை ராஜேந்திரன் சுப்பு பஞ்சு ஷகிலா சித்ரா லட்சுமணன் மற்றும் கேமியோ ரோலில் ஜீவா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் சந்தானம், நண்பேன்டா என்ற டயலாக்கை பேசி பெரிய அளவில் டிரண்ட் ஆக்கியிருந்தார். இந்த படம் 15 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 21ம் தேதி தியேட்டர்களில் ரி ரிலீஸாகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்