- Advertisement -
Homeபொழுதுபோக்குசெல்ஃபி எடுக்க வந்த ரசிகரை தள்ளி விட்ட பவுன்சர்கள், சோபாவில் அமர்ந்து வேடிக்கை பார்த்த நடிகர்...

செல்ஃபி எடுக்க வந்த ரசிகரை தள்ளி விட்ட பவுன்சர்கள், சோபாவில் அமர்ந்து வேடிக்கை பார்த்த நடிகர் தனுஷ் – இதுக்கு பேர்தான் லப்டப்பா என கலாய்க்கும் நெட்டிசன்கள்!

- Advertisement -

சமீபத்தில் நடந்த ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் தனுஷ், என் இதயம் லப்டப் லப்டப் என்று துடிக்காமல் பேன்ஸ் பேன்ஸ் என்று தான் துடிக்கிறது என்று பேசியிருந்தார். ஆனால் இப்போது அதே படத்தின் மற்றொரு நிகழ்ச்சியில் மேடையில் சோபாவில் அமர்ந்திருந்த அவரிடம், முட்டி போட்டு செல்ஃபி எடுக்க முயற்சித்த ரசிகர் ஒருவரை அவரது பவுன்சர்கள் பிடித்து இழுத்து கீழே தள்ளி வெளியேற்றி விட்டனர். ஆனால் தன் கண் முன்னே நடந்த இந்த சம்பவத்தை நடிகர் தனுஷ் கண்டுகொள்ளாமல் அமர்ந்திருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

சற்று முன்