நடிகர் விஜய் இப்போது டிவிகே என்ற கட்சியின் தலைவராகி விட்டார். இப்போது நடித்து வரும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக விஜய் 69 என்ற படத்தில் நடிக்கப் போகிறார். அந்த படத்துடன், தமிழ் சினிமாவுக்கு டாடா காட்டிவிட்டு, அரசியலில் முழு கவனம் செலுத்தப் போகிறார்.
வழக்கமாக சினிமாவில் மார்க்கெட் இழந்த பிறகுதான் பலரும் அரசியலுக்கு போவார்கள். எப்படியாவது ஒரு எம்பி. எம்எல்ஏவாக பதவி கிடைத்துவிட்டால் பதவி சுகம், செல்வாக்கில் காலத்தை அப்படியே புகழோடு கழித்து விடலாம் என்று ஆசைப்படுகின்றனர். அப்படிதான் பலரும் சினிமாவில் விட்டு வெளியேறிய பின் யோசிக்கின்றனர்.
ஆனால் விஜய் இப்போது தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார். இப்போதைய சூழலில், தமிழில் ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் விஜய் மட்டும்தான். கோட் படத்தில் அவரது சம்பளம் ரூ. 200 கோடிதான். இன்னும் அவரது சம்பளத்தை உயர்த்தினாலும் அதை சந்தோஷமாக தர தயாரிப்பாளர்கள் தயாராகவே இருக்கின்றனர்.
ஆனால் அவர் சினிமாவை விட்டு ஒதுங்கி, அரசியலில் தனது புகழை தொடர நினைக்கிறார். தன்னை வாழ்க்கையில் மிக உயரத்துக்கு கொண்டு சென்ற தமிழக மக்களுக்கு நல்ல ஆட்சியை தர வேண்டும். தரமான கல்வி, இலவச மருத்துவம் என்ற கொள்கையின்படி அவரது ஆட்சியை திட்டமிட்டு வருகிறார்.
இந்நிலையில் அவரது தம்பி விக்ராந்த் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். ஆனால் பெரிய அளவில் அவரால் முன்னேற முடியவில்லை. இரண்டாம் நிலை. மூன்றாம் நிலை என்ற அளவில் கூட அவரால் நடிகர்கள் வரிசையில் நிற்க முடியவில்லை. துணை கதாபாத்திரமாக பல படங்களில் நடித்துச் செல்கிறார்.
இப்போது, ரஜினிகாந்த் மகனாக லால் சலாம் படத்தில் நடித்து ஓரளவு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றிருக்கிறார். சமீபத்தில் பேசிய ஒரு நேர்காணலில், விஜய் அண்ணாவுக்கு ஒரு படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. இது அவரது 69 படத்தில் நிறைவேறினாலும் சந்தோஷம்தான், என்று கூறி ஆச்சரியத்தை தந்திருக்கிறார் விக்ராந்த்.





